சூரியகுமார் அறிமுகமானதிலிருந்து டி20 இந்திய அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வாங்கியது யார்? – வியப்பான பட்டியல்!

0
215
Sky

தற்போதைய தேதியில் டி20 கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருப்பது பேட்ஸ்மேன் தரவரிசையில் மட்டுமல்லாமல் திறமையின் அடிப்படையிலும் யார் என்றால் சூரியகுமார் யாதவ்தான்!

சூரிய குமாருக்கு அடுத்து இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற இடத்தில் டி20 கிரிக்கெட்டில் வரக்கூடிய யாரும் அவர் அளவுக்கு அதிரடியாக துல்லியமாக விளையாட கூடியவர்கள் கிடையாது. மேலும் சூரியகுமார் எவ்வளவு அதிரடியாக விளையாடினாலும் தொடர்ந்து ரண்களைக் கொண்டு வருகிறார். இந்தத் திறமை உலக கிரிக்கெட்டில் தற்போது யாருக்குமே கிடையாது!

- Advertisement -

சூரியகுமார் இந்திய அணிக்காக முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் 14, 2021 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் அறிமுகமான அந்த முதல் போட்டியில் சந்தித்த முதல் பந்தை வீசிய ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸருக்கு தூக்கி அடித்துதான் தனது முதல் ரன் கணக்கை ஆரம்பித்தார். அந்த தைரியமும் வேகமும் துல்லியமும் இதுவரை நிற்கவில்லை.

சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணிக்காக அறிமுகமானதிலிருந்து இதுவரை இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது வாங்கியவர்கள் யார்? எவ்வளவு? என்பதைத்தான் இந்தச் சிறிய கட்டுரையில் பார்க்க போகிறோம். சந்தேகத்துக்கு இடமில்லாமல் சூரியகுமார் முதல் இடத்தில் இருக்கிறார். ஆட்டநாயகன் விருதிலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் யாரும் அவருக்கு அருகில் கூட இல்லை என்பது தான் முக்கியமானது!

சூரியகுமார் – 11
விராட் கோலி – 3
புவனேஸ்வர் குமார் – 3
ரோஹித் சர்மா – 2
யுஸ்வேந்திர சாகல் – 2
தீபக் ஹூடா – 2
இஷான் கிஷான் – 2
ஸ்ரேயாஸ் – 2
ரவீந்திர ஜடேஜா – 2
தினேஷ் கார்த்திக் – 2
ஹர்திக் பாண்டியா – 2
அக்சர் படேல் – 2

- Advertisement -