நாளை புஜாரா இடத்தில் யாருக்கு வாய்ப்பு? என்ன பிளேயிங் லெவன்? – துணை கேப்டன் ரகானே பேட்டி!

0
535
Rahane

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும், அடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும், இறுதியாக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடக்க இருக்கிறது.

- Advertisement -

நாளை டொமினிக்கா மைதானத்தில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தனது தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிய அணியில் இருந்து விராட் கோலி மட்டுமே தற்பொழுது விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா கழட்டி விடப்பட்டு முகமது சமிக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இவர்களது இடத்தில் எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முகேஷ் குமார் வாய்ப்பு பெற்று இருக்கிறார். உனட்கட் மற்றும் சைனி ஆகியோர் இருக்கிறார்கள். எனவே இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஆச்சரியப்படும் விதத்தில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரகானே இது குறித்து கூறும் பொழுது ” ரோகித் தலைமையின் கீழ் விளையாடுவது மிகவும் நன்றாக இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் எனக்கு அவரது தலைமையின் கீழ் முதல் போட்டியாகும். அவர் மற்ற வீரர்கள் அவர்களது ஆட்டத்தை விளையாட சுதந்திரம் தருகிறார். இது ஒரு நல்ல கேப்டனின் அடையாளம். எங்களுக்கு இடையே புரிதல் நன்றாக இருக்கிறது.

புஜாரா இடத்தில் வாய்ப்பை பெறக்கூடிய யாருக்கும் தனிநபராக சிறப்பாக செயல்படுவதற்கு நல்ல ஒரு வாய்ப்பு. அந்த இடத்தில் யார் விளையாடுவார்கள் என்று தெரியாது. ஆனால் யார் விளையாடினாலும் நல்ல முறையில் விளையாடுவார்கள். ஏனென்றால் அணியில் உள்ள வீரர்களின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது.

புஜாரா மற்றும் சமிக்கு பதிலாக விளையாடும் வீரர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. இங்கு சீனியர் பவுலராக முகமது சிராஜ் இருக்கிறார். மேலும் அனுபவம் வாய்ந்த உனட்கட் இருக்கிறார். மீதமிருக்கும் இருவர்களும் அனுபவம் வாய்ந்தவர்களே. அவர்கள் எல்லோரும் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே ஒரு அணியாக எல்லோரும் சிறப்பாக செயல்பட இது ஒரு நல்ல வாய்ப்பு.

முகமது சமி அணிக்கு மிக நல்ல முறையில் செயல்பட்டார். அவர் அணிக்கான மூத்த பந்துவீச்சாளர். ஆனால் வெளிப்படையாக நீங்கள் அவருக்கு ஒரு ஓய்வை கொடுக்க வேண்டும். ஒரு நீண்ட சீசன் இருக்கிறது. இதனால் வாய்ப்பு கிடைக்கும் தோழர்களும் சிறப்பாக செயல்படுவார்கள்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!