ஹர்திக் பாண்டியா வெளியே போனது யார் முடிவு? – குஜராத் டைட்டன்ஸ் டைரக்டர் அதிரடி பேட்டி!

0
3405
Hardik

இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவுக்கு பிறகு மிகவும் முக்கியமான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டதில் இர்பான் பதானுக்கு அடுத்து முக்கியமானவர் ஹர்திக் பாண்டியா.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வளரும் வீரராக ஆரம்பத்தில் இவர் பார்க்கப்பட்டார். இவரை உருவாக்கிக் கொண்டு வந்ததில் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பங்கு மிகப் பெரியது.

- Advertisement -

அங்கிருந்து இந்திய அணிக்கு வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடி வந்த இவர் திடீரென காயத்தால் பாதிக்கப்பட்டு இந்திய அணியில் இருந்து வெளியேறினார். இதற்குப் பிறகு இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று மறுவாழ்வில் இருந்தார்.

இந்த காலகட்டத்தில் இவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவாரா வந்தாலும் பழையபடி இவரால் ஒரு வேகப்பந்து வைத்து ஆல் ரவுண்டராக தொடர முடியுமா என்ற நிறைய சந்தேகங்கள் இருந்தது.

இப்படியான நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை மெகா ஏலத்தில் கழட்டி விட்டது. ஆனால் அந்த நேரத்தில் ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனரான விக்ரம் சோலங்கி மற்றும் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா இருவரும் இவரை ஏலத்திற்கு முன்பாகவே வாங்கியதோடு, அப்பொழுதே அணியின் கேப்டன் என்றும் அறிவித்தார்கள். அதற்கு முன் இவர் கேப்டனாக இருந்தது கிடையாது.

- Advertisement -

இவரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு இரண்டு சீசன்களில் முதல் சீசனிலேயே கோப்பை மற்றும் இரண்டாவது சீசனில் இறுதிப்போட்டி என்று அணியை வழிநடத்திக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் தான் இவர் திடீரென குஜராத் அணியிலிருந்து வெளியேறி தன்னுடைய பழைய அணியான மும்பை அணியில் இணைந்து இருக்கிறார்.இந்த நிகழ்வு யாரால் நடந்தது? இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்து நிறைய கேள்விகள் இருந்து வருகிறது.

இதுகுறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறும் பொழுது ” குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கேப்டனான ஹர்திக் பாண்டியா அற்புதமான இரண்டு சீசன்களை வழங்குவதற்கு உதவியாக இருந்தார். இதன் விளைவாக ஒரு முறை கோப்பையை வென்றோம்; ஒரு முறை இறுதிப் போட்டிக்கு சென்றோம்.

அவர் இப்பொழுது தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். அவரது முடிவை மதித்து, அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!