“உலகக்கோப்பை ரேஸில் இருக்கும் டீம்ஸ் எது?”… கங்குலி ஹைடன் ஹர்பஜன் கணிப்பு.. கவாஸ்கர் அதிர்ச்சி!

0
4386
Odiwc2023

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை பட்டியலை இன்று மதியம் ஐசிசி வெளியிட்டு இருக்கிறது!

இந்த முறை நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதுகின்றன.

- Advertisement -

இதில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறுகின்றன. அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணி இறுதிப்போட்டிக்கு வருகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் ஆகிறது!

நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் அணிகளாக, எந்தெந்த அணிகள் இருக்கின்றன? என்கின்ற பேச்சுவார்த்தை கவாஸ்கர், ஹர்பஜன் சிங், கங்குலி மற்றும் ஹைடன் ஆகியோர் இடத்தில் நடந்தது. இதற்கு நால்வரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

முதலில் தனது கருத்தைத் தெரிவித்த கவாஸ்கர், இந்த உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாகத் தான் தேர்ந்தெடுத்ததில் இந்திய அணியை அவர் வைக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மூன்று அணிகளை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய விருப்பமான அணிகளாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை முதலில் வைத்து மூன்றாவதாக இந்திய அணியை வைத்திருக்கிறார்.

அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது விருப்பமான அணிகளாக ஹர்பஜன் சிங் கூறிய மூன்று அணிகளோடு பாகிஸ்தான் அணியும் சேர்த்து நான்கு அணிகளை வைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன் தன்னுடைய விருப்பமான அணிகளாக பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வைத்திருக்கிறார்.