“2-3.. விராட் கோலி இருக்கப்ப எங்க பக்கம் பயப்படுவாங்களா?.. திருப்புமுனை அதுதான்!” – ஜடேஜா அந்த நேரம் பற்றி பேச்சு!

0
2891
Jadeja

நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய போட்டி ரசிகர்களுக்கு மிகவும் விருந்தான ஒன்றாக அமைந்தது.

நேற்றைய ஆடுகளம் பழைய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நினைவுபடுத்துவது போல் இருந்தது. இந்த ஆடுகளத்தில் ரன்களை அடிப்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது.

- Advertisement -

இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா பொறுமையாக கட்டி எழுப்பிய அஸ்திவாரத்தை ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட் நடுவில் எடுத்து உடைத்தார்.

அதே சமயத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது 2 ரன்களுக்கு 3 விக்கட்டை இழந்துவிட்டது. இந்த இடத்தில் இருந்து விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெல்ல வைத்தார்கள்.

இதுகுறித்து பேசி உள்ள ரவீந்திர ஜடேஜா
“ஸ்மித் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் விக்கெட்டை எடுக்கும் பொழுது புதிதாக வந்து துவங்கும் பேட்ஸ்மேனால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும். அதனால் இந்த விக்கெட்தான் திருப்புமுனை என்று சொல்லுவேன்.

- Advertisement -

ஸ்டெம்ப் ஸ்டெம்ப் வீசுவது தான் என்னுடைய திட்டம். அதிர்ஷ்டவசமாக ஸ்மித் பந்து இன்னும் கொஞ்சம் திரும்பியது. எனது திட்டம் எளிமையானது. நான் இது ஒரு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகளம் என்று நினைத்துக் கொண்டேன். நான் அதிகமாக பரிசோதனை எதுவும் செய்யக்கூடாது என்றும் நினைத்தேன். ஏனென்றால் விக்கெட்டில் உயிர் இருந்தது. நாம் சரியாக வீசினால் அதுவே மற்றதை பார்த்துக் கொள்ளும்.

ஓரிரு ஓவர்களில் உங்கள் அணியின் மூன்று விக்கெட்டுகள் விழுந்தால் நீங்கள் பதட்டப்படத்தான் செய்வீர்கள். ஆனால் விராட் கோலி மற்றும் ராகுலை பற்றி எங்களுக்கு தெரியும். அவர்கள் பல ஆண்டுகளாக அணிக்கு அதைச் செய்து வருகிறார்கள்.

இதனால் அந்த நேரத்தில் யாரும் அளவுக்கு அதிகமான பீதியில் எல்லாம் இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுக்கு நிலைமை மிக நன்றாக தெரியும். அவர்கள் கடைசி வரை முன்னெடுத்துச் சென்று முடித்தார்கள்!” என்று கூறியிருக்கிறார்!