2024 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் எந்த அணியும் தகுதியும் பெறவில்லை, அதே சமயம் எந்த அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறவும் இல்லை.
இந்த ஐபிஎல்லில் புள்ளி பட்டியல் பொருத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா, லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் ஆகியவை முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. இந்த பட்டியலில் சென்னை 10 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும், டெல்லி அணி ஆறாவது இடத்திலும், தலா 8 புள்ளிகளை பெற்ற பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் 7,8 வது இடத்திலும், கடைசி இரண்டு இடங்களான மும்பை மற்றும் பெங்களூர் 9 மற்றும் 10வது இடத்தில் உள்ளன.
நேற்று நடந்த ஐம்பதாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. வலுவான ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முறையை முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.
பிளே ஆப் வாய்ப்புகள்
மும்பை அணியை பொறுத்த வரை இதுவரை 10 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. மீதம் மும்பை அணிக்கு நான்கு போட்டிகள் இருக்கும் நிலையில் நான்கிலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் உடன் முதல் நான்கு இடங்களுக்குள் வரலாம். நிலைமையை பொறுத்தவரையில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெரும்பாலான போட்டிகளில் வென்று முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே மும்பை அணி 14 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும். உதாரணமாக சன் ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணிகள் மோதும் போட்டியை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடைந்தால், ஒரு அணி 14 புள்ளிகள் பெறும். எனவே நான்காவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி
மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடம் தோல்வி அடைந்தால் மேலே குறிப்பிட்ட முடிவுகள் போன்று நடந்தால் மும்பை அணி 12 புள்ளிகள் உடன் ஏழு அணிகளில் ஒன்றாக நான்காவது இடத்திற்கு போராடும். அதாவது பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறாமல் ரன் ரேட் அடிப்படையில் காத்திருக்கும். பெங்களூர் அணியை பொறுத்தவரை மும்பை அணியை போன்று 3 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.
ஆனால் பெங்களூர் அணி தொடர்ச்சியாக கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றி பாதையில் உள்ளது. பெங்களூர் அணி இந்த தொடரில் 14 புள்ளிகள் பெற்றால் பிளே ஆப் ரேசில் இருக்கும். ஆனால் தற்போது சென்று கொண்டிருக்கும் நிலைமை அடிப்படையில் 12 புள்ளிகள் பெற்றாலும் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதா என்றால் இல்லை. தற்போது 16 புள்ளிகள் உடன் இருக்கும் ராஜஸ்தான் அணி மீதம் உள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் கொல்கத்தா சன்ரைசர்ஸ் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 18 புள்ளிகளில் இருக்கும். எனவே 50 போட்டிகள் தற்போது முடிந்திருக்கும் நிலையில், எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் இல்லை, பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறவும் இல்லை.
இதையும் படிங்க:டி20யில் 100வது விக்கெட்.. பர்பிள் கேப்.. அசத்தும் நடராஜன்.. ஆனால் டி20 உகோ-ல் வாய்ப்பில்லை
சிஎஸ்கே
இந்தப் பட்டியலில் சென்னை அணியை பொறுத்தவரை இனிவரும் நான்கு போட்டிகளில் கட்டாயமாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதில் ஒன்று சென்னை மைதானத்திலும் மீதி மூன்று போட்டிகள் வெளி மாநிலங்களில் நடைபெறுவதால் சென்னை அணிக்கு பிளே ஆப் சுற்று சற்று சிக்கலாக இருக்கும். இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் நல்ல நிலையில் இருப்பதால் சென்னை அணி நான்கு போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றாலே ப்ளே ஆப் சுற்றை எட்டி விடும்.