2023-ல் உலக கோப்பை ஆடப்போகும் இந்திய அணி அறிவிப்பு எப்போது.? என்னென்ன மாற்றங்கள் இருக்கும்.!

0
847

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .

10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலக சாம்பியன் பட்டத்திற்கான போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக உலக கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஆயத்தமாக துவங்கி வருகின்றன.

- Advertisement -

உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் பட்டியல் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதில் அறிவிக்கப்பட்ட வீரர்களை மாற்றுவதற்குரிய கடைசி நாள் செப்டம்பர் 27 ஆகும். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்திருக்கிறது.

இந்திய அணியின் தேர்வாளர்கள் உலகக் கோப்பை விளையாடும் வீரர்கள் பட்டியலை வெகு விரைவிலேயே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் 29ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்கான அணியை அறிவிக்கும் போது உலகக் கோப்பை காண முதல் கட்ட அணியை இந்திய அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 20 வீரர்களை கொண்ட பட்டியலை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதிலிருந்து 15 வீரர்கள் உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது. தற்போது உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியாவின் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது .

- Advertisement -

ஜஸ்ப்ரீத் பும்ரா உடற்தகுதி பெற்று இந்த மாதம் நடைபெற இருக்கும் அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார். இதன் மூலம் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பது உறுதியாக இருக்கிறது. பேட்டிங் பொருத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. பந்துவீச்சில் பும்ரா, முகமது சமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேத பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நான்காவது பந்துவீச்சாளராக சார்துல் தாக்கூர் அல்லது ஜெய்தேவ் உனத்கட் இருவரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர் .

இந்திய அணிக்கு இன்னொரு பெரிய சவாலாக இருந்து வருவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ரிஷப் பண்ட் விபத்தில் காயம் அடைந்த பிறகு கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இடம் பெற்று விளையாடி வந்தார் தற்போது அவரும் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால் இந்தியா அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவரும் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்படலாம் எனவும் தேர்வு குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.

மேலும் பிசிசிஐ நிர்வாகத்தின் நபர் ஒருவர் தெரிவிக்கையில்” கேஎல் ராகுல் காயத்திலிருந்து மீண்டு வந்து அப்போது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றாலும் அவர் 50 ஓவர் பயிற்சி போட்டிகளை ஆடிய பிறகே முழு உடல் தகுதியை பெற்று இருக்கிறாரா என்பது தெரியவரும். அந்தத் தேர்விலும் அவர் பாஸாகிவிட்டால் இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயம் என்று தெரிவித்திருக்கிறார் . இந்திய ரசிகர்கள் அனைவரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பார்க்க ஆவலாக உள்ளனர்.