சிஎஸ்கே பதிரனா எப்படி இருக்கிறார்.. ஐபிஎல்-ல் எப்போது ஆடுவார்? – மேனேஜர் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

0
95
CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரை வென்று நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரச்சின் ரவீந்தரா, டேரில் மிட்சல் மற்றும் சர்துல் தாக்கூர், இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஆகியோரை வாங்கி மேலும் பலமாகி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று முதல் போட்டியில் விளையாட இருக்கும் அந்த அணிக்கு, விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்த துவக்க இடது கை ஆட்டக்காரர் கான்வே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படும் பதிரனா இருவரும் காயம் அடைந்து இருப்பது சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற பொழுது துவக்க வீரராக யாருடைய கவனத்தையும் பெரிய அளவில் திருப்பாமல் கான்வே அனாயசமாக 600 ரன்கள் தாண்டி இருந்தார். அவருடைய அற்புதமான டச் பேட்டிங் சிஎஸ்கே அணியின் சீரான பேட்டிங் செயல்பாட்டுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்திருந்தது.

அதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில் இலங்கை அணியின் இளம் ஸ்லிங் ஆக்சன் பவுலர் மதிஷா பதிரனா 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, கூடுதல் பேட்ஸ்மேன் இருப்பதால் எல்லா அணிகளும் அதிரடியாக விளையாடுகின்றன. ஆனாலும் கூட டெத் ஓவரில் பந்து வீசி, ஓவருக்கு எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். எனவே இவரது பங்களிப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமாக அமைகிறது.

பதிரனா எப்போது வருவார்?

இந்த நிலையில் இரண்டு முக்கியமான வீரர்களும் காயம் அடைந்திருக்கிறார்கள். இதில் கான்வே இரண்டாவது பகுதி ஐபிஎல் தொடரின் இறுதியில் கிடைப்பதற்குதான் வாய்ப்புகள் இருக்கிறது என்பது தெரிந்து விட்டது. ஆனால் கடந்த வாரத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த பதிரனா நிலைமை என்ன? என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

அவருடைய இடத்தில் சிஎஸ்கே அணியில் பங்களாதேஷ் அணியின் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் இருந்தாலும் கூட, பதிரனாவிடம் இருக்கும் வேகம் மற்றும் யார்க்கர்கள் இல்லை. மேலும் மலிங்காவை விட இவருடைய கைகள் இன்னும் கீழே தாழ்வாக சென்று பந்தை ரிலீஸ் செய்வதால், மேலும் வேகமாகவும் வீசுவதால், பேட்ஸ்மேன்கள் கணிக்க தடுமாறுகிறார்கள். மாற்றுவீரர் இருந்தாலும் கூட இவர் மிகவும் முக்கியமான வீரராக இருக்கிறார்.

இதையும் படிங்க : ஆர்சிபி கிடையாது.. இந்த 4 டீம்ஸ்தான் 2024 ஐபிஎல் பிளே ஆஃப்க்கு போகும் – இர்பான் பதான் கணிப்பு

இந்த நிலையில் பதிரனாவின் மேனேஜர் அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்தான முக்கிய தகவலை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக “பதிரனா எங்கே? என்ற கேள்விக்கு பதில் அவர் பிட்டாக, தண்டர் பந்துகளை வீசத் தயாராக இருக்கிறார். நீங்களும் தயாராக இருங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் பொழுது இன்றே பதிரனா விளையாடுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.