ஆர்சிபி கிடையாது.. இந்த 4 டீம்ஸ்தான் 2024 ஐபிஎல் பிளே ஆஃப்க்கு போகும் – இர்பான் பதான் கணிப்பு

0
231
Irfan

ஐபிஎல் தொடரில் 2022 ஆம் ஆண்டு முதல் 8 அணிகளில் இருந்து 10 அணிகள் என்று அணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. மேலும் 10 அணிகளில் இருந்து நான்கு அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்று செல்ல முடிகின்ற காரணத்தினால், ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றின் மதிப்பு மிக அதிகமாகி இருக்கிறது.

தற்போதைய கிரிக்கெட் உலகில் வேறு எங்கும் பத்து அணிகள் கொண்டு டி20 கிரிக்கெட் லீக்கை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் நடத்துவதில்லை. ஐபிஎல் தொடரின் தரமும் அதில் இருக்கும் போட்டித் தன்மையும் சிறந்த கிரிக்கெட்டை தருவதற்கு உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே இந்தியா தாண்டியும் ஐபிஎல் தொடருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் இரண்டு அணிகளில் குஜராத் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று விட்டது. தற்பொழுது பழைய அணிகளில் ஆர்சிபி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும், புதிய அணிகளில் லக்னோ அணியும் சேர்த்து மொத்தம் நான்கு அணிகள் இன்னும் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வெல்லாமல் இருக்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில், நடப்பு 17 வது ஐபிஎல் சீசனுக்கு தங்கள் அணிகளுக்கு தேவைப்பட்ட வீரர்களை வாங்கி எல்லா அணிகளுமே, கடந்த ஆண்டை விட இன்னும் அதிக பலம் ஆகி இருக்கின்றன. இதன் காரணமாக நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் மிகவும் போட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். எனவே ப்ளே ஆப் சுற்றுக்கு அணிகளிடையே கடுமையான போட்டி நிலவும்.

ஆர்சிபி-க்கு வாய்ப்பில்லை

நடக்க இருக்கும் ஐபிஎல் சீசனில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் வலிமையான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், நட்சத்திர வீரர்களைக் கொண்டிருந்தாலும் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை வெல்லாத ஆர்சிபி அணிக்கும் அவர் இடம் தரவில்லை.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “அணிகளை எடுத்து வைத்து பார்க்கும் பொழுது எந்த அணிகள் பேப்பரில் சிறந்ததாக இருக்கிறது என்பதை பொறுத்து, அதில் இருந்து நான்கு சிறந்த அணிகளை இந்த வருட ஐபிஎல் தொடரின் பிளே ஆப் நான் தேர்ந்தெடுக்கிறேன். பேப்பரில் பார்க்கும் பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி மிக வலிமையான அணியாக தெரிகிறது.

இதையும் படிங்க : 600 ரன்னுக்கு அதிகமா அடிப்பேன்.. எங்க டீமோட முக்கிய பிளேயர் இவர்தான் – சவால் விடும் கேகேஆர் வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் என நாம் எப்பொழுதும் நினைக்கிறோம். இதற்கு அடுத்த இடத்தில் நிலையான செயல்பாட்டை கொண்டிருக்கும். மேலும் கேகேஆர் அணி வலிமையான அணியாகத் தெரிகிறது. இந்த நான்கு அணிகளும் இந்த வருட ஐபிஎல் தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.