“இந்தியாவிற்கு வந்ததும் விரக்தி அடைய வைத்து விட்டார்கள்.. அந்த பையன் பாவம்” – பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி

0
565
Stokes

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அணியை அறிவித்து தயாராக ஆரம்பித்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்.

இந்த வகையில் அவர்கள் 9 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமை அபுதாபியில் அமைத்ததோடு, இந்திய சூழ்நிலையை ஒத்திருக்கும் வகையில் ஆடுகளம் வரை தயார் செய்து விளையாடி பயிற்சி பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தமுறை இங்கிலாந்து அணியில் சுழல் பந்துவீச்சு கூட்டணியாக அனுபவ சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச் உடன் இளம் சுழல் பந்துவீச்சாளர்கள் ரேகான் அஹமத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பசீர் ஆகிய சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு முதல் போட்டியை விளையாடுவதற்காக ஹைதராபாத்துக்கு ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியினரும் வந்து விட்டார்கள்.

ஆனால் ஆறு முதல் தர போட்டிகள் மட்டுமே விளையாடி இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கும் இளம் சுழல் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் மட்டும் இந்தியா வர முடியவில்லை. அவருக்கு இன்னும் விசா பிரச்சனைகள் நீடித்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறும்போது ” இங்கிலாந்து அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அந்த இளைஞருடைய முதல் அனுபவம் இப்படி அமைந்ததை நான் விரும்பவில்லை. ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் விரக்தியாக இருக்கிறது.

நாங்கள் இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்திலேயே அணியை அறிவித்து விட்டோம். ஆனால் பஷீர் இப்பொழுது இங்கு வருவதற்கு விசா இல்லாமல் வெளியில் இருக்கிறார். நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தது இப்பொழுது ஏமாற்றமாக இருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்.. ஹைதராபாத் மைதான எப்படியானது? மழை பாதிப்பு இருக்குமா?.. முழு தகவல்கள்

இந்திய சூழ்நிலையில் அந்தந்த நேரத்தில் நான் என்ன உணர்கிறேனோ அதை பொறுத்து ஜோ ரூட் கையில் வந்து இருக்கும். ஜெய்ஸ்வால் களம் இறங்கினால், முதல் ஓவரை கூட ஆடுகளத்தைப் பொறுத்து ஜோ ரூட் வீசலாம். ஆடுகளத்தில் இருந்து என்ன பெற முடியும் என்பதில், உலகில் எங்கும் இல்லாததை விட அணித்தேர்வு இந்தியாவில் அதிகம் சிந்திக்க வேண்டியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.