இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்.. ஹைதராபாத் மைதானம் எப்படியானது? மழை பாதிப்பு இருக்குமா?.. முழு தகவல்கள்

0
141
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆரம்பிக்கிறது.

இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2010 நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. கடைசியாக இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2018 அக்டோபர் மாதம் நடைபெற்று இருக்கிறது.

- Advertisement -

மொத்தமாக இந்த மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்திருக்கிறது. இதில் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்து இருக்கிறது. விசிட்டர்ஸ் டீம் யாரும் இதுவரை இங்கு வென்றது கிடையாது.

மேலும் இந்த மைதானத்தில் இதுவரை 11 டெஸ்ட் சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் அதிகபட்சமாக புஜாரா மற்றும் முரளி விஜய் இருவரும் தலா இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார்கள்.

இங்கு இந்திய அணி பொதுவாகவே 3 சுழற் பந்துவீச்சாளர்கள் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்று களம் இறங்கி இருக்கிறது. ஆனாலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியவராக இருக்கிறார்.

- Advertisement -

பொதுவாக ஹைதராபாத் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரையில் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 400 மற்றும் 375 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ் ஸ்கோர்தான் 200க்கும் கீழே செல்கிறது.

எனவே இங்கு ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய சாதகமாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ் கொஞ்சம் கடினமாகவும் மாறுகிறது. எனவே முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும். இதுவரையில் பேட்டிங் சாதமாகஅறியப்பட்ட ஹைதராபாத் மைதானம், இந்தப் போட்டிக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : INDvsENG முதல் டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. அக்சர் குல்தீப்?

மேலும் இந்த போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் முன்னும் பின்னும் எந்தவிதமான மழை அச்சுறுத்தலும் கிடையாது. 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போட்டி ஐந்து நாட்கள் சென்றால் ஐந்து நாட்களுமே தடையில்லாமல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.