“கோலி விக்கெட்ட எடுத்தப்ப.. ஸ்மித் ஒரு விஷயத்தை காட்டினார்.. அப்படி ரசித்தேன்!” – கம்மின்ஸ் பரபரப்பு பேட்டி!

0
13722
Cummins

ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி இதுவரை ஆறு முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது. உலகக் கிரிக்கெட் அணிகளின் இதுவே அதிகபட்சம் ஆகும்.

மேலும் ஆஸ்திரேலியா இதுவரை கைப்பற்றிய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இது மிகச்சிறந்த வெற்றியாக அவர்களின் கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகும்.

- Advertisement -

ஏனென்றால் இந்த முறை அவர்கள் வழக்கத்தை விட கொஞ்சம் பலவீனமான அணியாக இருந்தார்கள். அவர்கள் எதிர்கொண்ட இந்திய அணி இந்த தொடரின் மிகச் சிறந்த அணியாக இருந்தது.

இப்படியான காரணங்களால் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் வெற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தை பெறுகிறது. இதன் காரணமாகவே அணியை வழிநடத்திய கேப்டன் கம்மின்ஸ் மிக முக்கிய இடத்தையும் பெறுகிறார்.

முதல் இரண்டு போட்டிகளில் தோற்று அதற்குப் பிறகு தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியதில் ஆஸ்திரேலியா அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பும், கேப்டனாக கம்மின்ஸ் பங்களிப்பும் மிகவும் அற்புதமான ஒன்று.

- Advertisement -

இதுகுறித்து இன்று பேசி உள்ள கம்மின்ஸ் கூறும் பொழுது “இறுதிப் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய பொழுது நாங்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருந்தோம். அப்பொழுது ஸ்மித் எங்களிடம் பாய்ஸ் கூட்டத்தை பாருங்கள் என்று சொன்னார். ஒரு லட்சத்திற்கும் மேலான இந்திய ரசிகர்கள் நூலகத்தில் இருப்பது போல அமைதியாக இருந்தார்கள். அதை நான் நீண்ட நேரம் ரசித்தேன்.

ஒரு உலகக் கோப்பையை வெல்வதற்கு நிறைய தேவைப்படுகிறது. அது 11 வீரர்களால் மட்டும் சாத்தியப்படுவது கிடையாது. 25 பேர் அதற்கு தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த அணி மற்றும் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுவதால் மட்டுமே வெல்ல முடியும். எங்களுடைய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார்கள். இதிலிருந்துதான் எல்லாமே எங்களுக்கு கிடைக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

ஒரு வேகப்பந்துவீச்சாளர் எவ்வளவு விளையாடினாலும் அவர் உடல் தகுதியோடு இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒருநாள் தொடையில் தசைப்பிடிப்பு வரும், பின்பு தூங்கி எழும்பொழுது அது வேறு ஒரு இடத்தில் இருக்கும். இப்படி ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். ஆனால் உடல் நன்றாக இருந்தால் நாங்கள் விளையாடுவோம்!” என்று கூறியிருக்கிறார்!