வெளிய நிறைய வேலை நடக்குது.. புது வெரைட்டி கிடைச்சிருக்கு – சிஎஸ்கேவுக்கு பாப் டு பிளேசிஸ் மெசேஜ்

0
2903
Faf

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு பிரகாசமான ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் தற்போதைய சிறப்பான செயல்பாடுகள் குறித்து அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பேசியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி டாஸ் தோற்று இருந்தாலும் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்,வில் ஜேக்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் மூவரும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். இன்றைய போட்டியில் பாப் மற்றும் விராட் கோலி சீக்கிரத்தில் ஆட்டம் இழந்த போதும், ஆர்சிபி நல்ல முறையில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

தொடர்ந்து பந்து வீசிய ஆர்சிபி அணி பவர் பிளேவில் மட்டும் டெல்லி அணியின் முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியது. அங்கேயே அந்த அணியின் வெற்றியும் உறுதியானது. ஒரு பக்கத்தில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மட்டும் காசு கொடுத்து 39 பந்தில் 57 ரன்கள் எடுத்தார்.

டெல்லி அணி இறுதியாக 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் ஆர்சிபி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் கடைசி போட்டியில் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக, குறிப்பிட்ட ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது என்கின்ற நிலையில் ஆர்சிபி தற்பொழுது இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளேசிஸ் பேசும் பொழுது “இந்த வெற்றியில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் மிகவும் புத்திசாலித்தனமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினோம். எங்களுக்கு ஆரம்பத்தில் விஷயங்கள் ஒன்று சேரவில்லை. தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டையும் ஒன்று சேர்க்க முடிகிறது. சில நேரங்களில் மக்கள் போட்டியை பற்றி நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள். இதை தாண்டி எங்களுக்கு பந்தை இருக்கக்கூடிய ஒரு இடது சுழல் பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். ஸ்வப்னில் சிங் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க :CSK vs RCB போட்டியில்.. பிளே ஆப் செல்ல இரு அணிகளும் என்ன செய்ய வேண்டும்.. வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

எங்களுக்கு திரைக்கு பின்னால் வெளியில் நிறைய வேலைகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இதையெல்லாம் சரியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பந்து வீச்சில் நிறைய வெரைட்டிகள் வந்திருக்கிறது.கடந்த சில போட்டிகளில் தயால் மற்றும் லாக்கி பெர்குஷன் இருவரும் விதிவிலக்காக இருந்தார்கள். நாங்கள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பாணியில் விளையாட விரும்புகிறோம். தைரியமாக இருக்க வேண்டும், சிலவற்றை தொடர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -