நாங்க ஜெயிக்க காரணம் டெல்லி கலீல் அகமதுதான்.. இதத்தான் கண்டுபிடிச்சோம் – ஆர்சிபி கேமரூன் கிரீன் பேட்டி

0
1019
Green

நேற்று ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கி ஆட்டநாயகன் விருது பெற்ற கேமரூன் கிரீன் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். கடைசியில் கேமரூன் கிரீன் 24 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 200 ரன்கள் எட்ட இருந்த ஆர்சிபி கடைசியில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு அக்ச்சர் படேல் மட்டுமே 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லோரும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பந்துவீச்சில் யார் தயால் 3 விக்கெட் கைப்பற்றினார்.

அதே சமயத்தில் இன்றைய போட்டியில் கேமரூன் கிரீன் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டும் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது தரப்பட்டது.

போட்டியில் முடிவுக்கு பின்னால் பேசிய கேமரூன் கிரீன் “வெளிப்படையாக இது சிறந்த போட்டி. கடந்த சில போட்டிகளாக நாங்கள் எங்களுடைய பார்மை கண்டுபிடித்தோம். ஆரம்பத்தில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளில்தான் இருந்தோம். பெரிய ஸ்கோர் அடித்த போட்டிகளில், எங்களுக்கு பந்துவீச்சில் ஆரம்பகட்டத்தில் விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இன்று அது எங்களுக்கு கிடைத்தது.

- Advertisement -

இதையும் படிங்க : வெளிய நிறைய வேலை நடக்குது.. புது வெரைட்டி கிடைச்சிருக்கு – சிஎஸ்கேவுக்கு பாப் டு பிளேசிஸ் மெசேஜ்

இன்றைய ஆடுகளத்தில் எல்லோருக்கும் ஏதாவது இருந்தது. பந்தின் வேகத்தில் விளையாடுவது எளிதாக இருப்பதைக் கண்டுபிடித்தோம். இதன் காரணமாகவே கலீல் அகமது நிறைய கட்டர்களையும் மெதுவான பந்துகளையும் வீசினார். அப்படியான பந்துகளை டைம் செய்து டார்கெட் செய்து அடிக்க முடியவில்லை. எனவே நாங்களும் பந்துவீச்சில் அதையே செய்தோம். இந்திய சூழ்நிலையை பழகிக் கொள்வதற்கு எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. இந்த மைதானம் சிறியதாக இருந்தாலும், பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் கொஞ்சம் உதவி இருந்தது” என்று கூறியிருக்கிறார்.