“கோலி ஃபர்ஸ்ட் கேட்ச் தந்த டைம் பதட்டத்துல எழுந்து ஓடிட்டேன்.. ஒரே இடத்தில உட்கார்ந்து கால் வலிக்குது!” – அஷ்வின் சுவாரசிய பேச்சு!

0
6646
Ashwin

நடப்பு உலகக்கோப்பையில் தங்கள் அணிக்குள் வந்த இரண்டு பேர் ஆச்சரியமானவர்கள். ஒருவர் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன். இன்னொருவர் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இவர்கள் இருவருமே முதலில் அறிவிக்கப்பட்ட தங்களது உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. ஆனால் மற்ற வீரர்களின் காயம் இவர்களை அணிக்குள் கொண்டு வந்தது. அதேசமயத்தில் உலகக்கோப்பைக்கு முன்பாக கிடைத்த வாய்ப்பில் இவர்கள் தங்களை நிரூபித்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதிக்கொள்ள, இந்த இருவருமே ஒரே போட்டியில் களம் இறங்கியது சுவாரசியமான ஒன்றாக அமைந்தது.

இந்த நிலையில் மார்னஸ் லபுசேன் இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்து முக்கியமான நேரத்தில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கேஎல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துவிட்டார்.

ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்த ஆட்டம் மிகச் சிறந்ததாக அமைந்திருக்கிறது. அவர் பந்துவீச்சில் கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தியதோடு, பத்து ஓவர்களுக்கு 38 ரன்கள் மட்டும் தந்து, ஒரு மெய்டனும் செய்திருந்தார். மேலும் 4582 நாட்களுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கத்தில் இந்திய அணிக்காக அவர் வெள்ளைப்பந்தில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டிக்கு பின் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “விராட் கோலி அடித்த பந்து காற்றில் ஏறியதை கண்டதும் நான் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே ஓடி விட்டேன். உண்மையில் நான் ஓடி விட்டேன். எல்லாம் முடிந்தது என்று என்னை எழுப்புவது போல் இருந்தது.

இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி. இங்கு எதுவுமே எளிமையானதாக இருக்காது. 199 ரன்களை சுலபமாக எடுத்து நீங்கள் சுலபமாக வெற்றி பெற முடியும் என்று நினைக்க முடியாது. நான் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடி சென்று ஒரே இடத்தில் அமர்ந்திருந்து தற்பொழுது கால்கள் வலிக்கிறது.

இன்றைக்கு அவருடைய ஆட்டம் எப்படி இருந்தது என்று வாட்ஸ் அப் மற்றும் சமூக ஊடகங்களில் நான் பார்க்க வேண்டும். ஆனால் நான் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்தியாவுக்காக நான் தொடர்ந்து விளையாடி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 13 ஆண்டுகளாக விளையாடுகிறேன். இன்னும் தொடர்ந்து கொடுக்க நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!