“ஏமாற்றத்துடன் கோஹ்லி என்னைப் பார்த்தபோது ஒரு நொடி உறைந்து போனேன்…..” “அப்போதே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகலாம் என்று நினைத்தேன்” – மனம் திறந்த இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்!

0
2486

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற புதன்கிழமை இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆர்சிபி யின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது 2015 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . மேலும் அந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தனது கேப்டன்ஷியில் அந்த வெற்றியை மிகவும் ஸ்பெஷல் ஆன வெற்றி என குறிப்பிட்டு இருந்தார் விராட் கோலி.

- Advertisement -

தேநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து போட்டியை ராசியும் நோக்குடன் ஆடிக் கொண்டிருந்தது. ஹாஷிம் அம்லா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய இருவரது விக்கெட்டையும் இந்திய வீரர்களால் சுலபமாக வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியின் வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். தேனீர் இடைவேளைக்கு பின்பான ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்துவீச்சினால் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் அஸ்வின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தப் போட்டியின் ஐந்தாவது நாளின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து விடலாமா என்று எண்ணும் அளவுக்கு தன்னை பாதித்ததாக தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் . இது குறித்து தனது புத்தகமான “கோச்சிங் பியான்ட் மை டேஸ் வித் இந்தியன் கிரிக்கெட் டீம்” என்ற புத்தகத்தில் விவரமாக குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

இது குறித்து எழுதி இருக்கும் ஸ்ரீதர் ” தேநீர் இடைவேளையின் போது தென்னாபிரிக்க அணியின் ஹாசிம் அமலா மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அதிரடிக்கு பெயர் போன ஏ பி டி பிலியர்ஸ் அந்தப் போட்டியில் தனது இன்னொரு பரிணாமத்தை காட்டி விக்கெட்டை தராமல் மிகவும் பொறுமையாக ஆடிக் கொண்டிருந்தார். இந்திய அணியின் வீரர்களும் மீதம் இருக்கும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர். மேலும் தேநீர் இடைவேளையின் போது நாங்கள் சில ஆட்டையுக்திகளை பற்றி விவாதித்தோம். உமேஷ் யாதவிடம் ரிவர்ஸ் சிங் பந்துகளை வேறொரு கோணத்தில் இருந்து வீசுமாறு அவருக்கு அறிவுறுத்தினோம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” அணி வீரர்களுடனான உரையாடல் முடிந்த பின்பு நான் எனது பழைய நண்பர் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் வீடியோ அனாலிசிஸ்ட் பிரசன்னா அகோரம் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். திடீரென யாரோ என்னை அழைப்பது போன்று கேட்டது . திரும்பிப் பார்த்தால் இந்திய அணியின் கேப்டன் பிராட்கோலி என்னை அழைத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது . தேநீர் இடைவேளை முடிந்து வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் முன் அவர்களுக்கு கேட்சிங் ப்ராக்டிஸ் கொடுப்பதை நான் மறந்துவிட்டேன். அப்போது விராட் கோலி என்னை பார்த்த பார்வையில் நான் அப்படியே உறைந்து போனேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் இது பற்றி தெரிவிக்கையில்” நான் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியேறி மைதானத்திற்குள் செல்லும்போது நடுவர்கள் மைதானத்திற்குள் வந்து விட்டார்கள் போட்டியும் ஆரம்பிக்க தயாரானது. அப்போது விராட் கோலியை கவனித்தேன் அவர் என் மீது அதிருப்தியில் இருந்தது எனக்கு தெளிவாக தெரிந்தது. அந்த நிமிடம் யோசித்தேன் என்னுடைய பதவியை ராஜினாமா செய்து விடலாமா என . ஏனென்றால் நான் அந்த நேரத்தில் என்னுடைய கடமையிலிருந்து தவறி விட்டேன் . ஆனால் அதன் பிறகு நான் வேலை செய்யும் ஒவ்வொரு நாட்களையும் எனது முதல் நாளாக நினைத்து பொறுப்புடன் பணியாற்றினேன் அது எனக்கு ஒரு கடினமான அனுபவமாக அமைந்தது” என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் .

ஆர்.ஸ்ரீதர் இந்தியா அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் . இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி உலக அரங்கில் சிறந்த பில்டிங் செய்யும் அணியாக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.