199 ரன்னில் ஜெய்ஸ்வால்.. சர்பராஸ் கான் சொன்ன அட்வைஸ்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

0
593
Sarfaraz

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் மும்பை வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட் போட்டியில் 80 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை தவறவிட்டார். அவருக்கு இந்திய மண்ணில் முதல் சர்வதேச சதம் தள்ளிப்போனது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து அதிரடியாக இரட்டை சதம் அடித்தார். இதற்கு அடுத்து மூன்றாவது போட்டியில் மீண்டும் வந்து மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்து கிரிக்கெட் உலகத்தை பெரிய அளவில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் காயம் குணமடையாத காரணத்தினால் பங்கேற்கவில்லை. இதனால் முதல் வாய்ப்பை இந்திய அணியில் பெற்ற மும்பை வீரரான சர்பராஸ் கானும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

இவர்கள் இருவரும் சுழற் பந்து வீச்சை விளையாடும் விதத்தை பார்க்கும் பொழுது மிக அனாயசமாக இருக்கிறது. சிறுவர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்குவது போல இவர்கள் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்களை இஷ்டப்படும் பொழுதெல்லாம் அடிக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் முதல் டெஸ்டில் வாய்ப்பை பெற்ற சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக அரை சதம் அடித்திருக்கிறார். இதன்மூலம் அவர் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிகள் இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் மிக வேகமாக விளையாடிக் கொண்டிருந்த அவர், எதிரில் ரவீந்திர ஜடேஜா 99 ரன்னில் சதத்திற்காக அவசரப்பட்டு ஓட முடிவு செய்ய, அவருடைய தவறால் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இல்லையென்றால் முதல் சர்வதேச அறிமுகத்திலேயே சர்பராஸ் கான் சதம் அடித்திருப்பார்.

இதையும் படிங்க : இஷான் ஸ்ரேயாஸ் தீபக் சகருக்கு நெருக்கடி.. ஜெய் ஷா புது கடிதம்.. பிசிசிஐ கறார்

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிய ஜெய்ஷ்வால் ரன்கள் ஓடுவதில் சில தவறுகள் செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது ஜெய்ஸ்வால் சர்பராஸ் கான் இடம் ” நான் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறேன்” என்று கூற, அதற்கு ஜடேஜாவை மனதில் வைத்து சர்பராஸ் கான் “இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். நீ முன்கூட்டியே ரன் ஓடுவதை மட்டும் செய்யாதே” இன்று அறிவுரை கூறியிருக்கிறார். தற்பொழுது இவர்கள் பேசிக் கொண்ட இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.