இஷான் ஸ்ரேயாஸ் தீபக் சகருக்கு நெருக்கடி.. ஜெய் ஷா புது கடிதம்.. பிசிசிஐ கறார்

0
238
BCCI

தற்பொழுது இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கு தேர்வாவதற்காக பல இளம் வீரர்கள் கடுமையாக உழைத்து விளையாடி வருகிறார்கள்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சித் தொடரின் முதல் பகுதி போட்டிகள் ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் நடைபெறும் வேளையில் ரஞ்சி தொடர் நிறுத்தப்பட்டு, ஐபிஎல் முடிந்ததும் இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெறும்.

- Advertisement -

இந்த நிலையில் காயம் ஏதும் இல்லாமலும், மேலும் இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருக்கும், ஏற்கனவே இந்தியா அணிக்கு விளையாடி இருக்கும் வீரர்கள், உதாரணமாக இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சகர், க்ருனால் பாண்டியா போன்றவர்கள், தற்பொழுது நடைபெறும் ரஞ்சி தொடருக்கு தங்கள் மாநில அணிக்கு திரும்பாமல் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் எதிர்வரும் ஐபிஎல் தொடரை மனதில் வைத்து, ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி பெற்று தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரை புறக்கணிக்கிறார்கள்.

எந்த கிரிக்கெட் நாடாக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாமல், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தவே முடியாது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் செயல்படுவதை பொறுத்துதான் தேசிய அணியும் இடம் கொடுக்கப்பட வேண்டும். தற்போது பிசிசிஐ இந்த விஷயத்தில் விழித்துக்கொண்டு கண்டிப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

இவன் ஒரு பகுதியாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்கனவே வாய்மொழியாக ஐபிஎல் தொடருக்காக உள்நாட்டு கிரிக்கெட் தொடரை புறக்கணிக்கும் இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தார். மேலும் தேர்வுக்குழுவுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு, இப்படியான வீரர்கள் விலக்கப்படுவார்கள் என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து கடிதமும் எழுதப்படும் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தன்னுடைய கடிதத்தில் “இப்பொழுது வீரர்களிடையே ஒரு போக்கு காணப்படுகிறது.அது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் உள்நாட்டு தொடரை புறக்கணிக்கிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்தான் இந்திய கிரிக்கெட்டின் அடித்தளமாக இருந்திருக்கிறது. விளையாட்டிற்கான எங்கள் பார்வையில் உள்நாட்டு கிரிக்கெட்டை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை.

உள்நாட்டு கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. இந்திய அணிக்கு அதுவே ஆரோக்கியமாக இருந்து வருகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : 7 வருடங்கள்.. பஞ்சாப்பை வீழ்த்தி தமிழ்நாடு காலிறுதிக்கு தகுதி.. சாய் கிஷோர் இந்திரஜித் அபாரம்

இந்திய அணிக்காக விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரரும் தங்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் நிரூபிக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களின் செயல்திறனே, இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்கு அளவுகோலாக இருக்கிறது. மேலும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க விட்டால் கடுமையான தாக்கங்களை அது ஏற்படுத்தும்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.