“நான் ஆஸி கோச்சா இருந்தப்ப.. இந்த 2இந்திய வீரர்களும் ரொம்ப பயமுறுத்திட்டாங்க” – லாங்கர் சுவாரசிய பேச்சு!

0
457
Langer

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு என்று தனித்த பாரம்பரியமும் கௌரவமும் உண்டு. ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் எப்பொழுதும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தும் அணியாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படியான ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயர் 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தென் ஆப்ரிக்காவில் வந்தது. இதற்குப் பிறகு ஆஸ்திரேலியா கிரிக்கெட் தன்னுடைய பழைய ஆக்ரோஷ பாணியில் வெளிவந்து, உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்துவது கடினம் என்று கருதப்பட்டது. ஏனென்றால் அவர்களை நோக்கி எப்பொழுதும் இந்த விமர்சனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இப்படி ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை நெருக்கடிகள் சூழ்ந்து இருந்த பொழுது, அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக அணி வீரர்களின் மனநிலையை மாற்றி, ஆசஸ் தொடரை கைப்பற்றி, அடுத்து டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை மீட்டார். அதே சமயத்தில் வீரர்களை பயிற்சி என்று அவர் மிகவும் கடினமாக நடத்துகிறார் என்று கூறி, வீரர்கள் அவருக்கு எதிராகத் திரும்ப, அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

தற்போது இவர் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டிருக்கிறார். இவர் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் பற்றி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

ஜஸ்டின் லாங்கர் கூறும் பொழுது “நான் ஆஸ்திரேலியா அணிக்கு பயிற்சியாளராக இருந்த பொழுது, இந்தியாவுடன் ஆன தொடரின் போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் அவுட் ஆகும் வரை நான் ரிலாக்ஸ் செய்யவே இல்லை. ஏனென்றால் ராகுல் மிகவும் ஆபத்தான மற்றும் நேர்த்தியான வீரர்.

கேஎல் ராகுலுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அவர் சுழற் பந்து வீச்சு வேகப்பந்து வீச்சு இரண்டையும் சிறப்பாக விளையாடுவார். ஐபிஎல் தொடரில் ஒரு பயிற்சியாளராக அவரைப் போன்ற ஒரு கேப்டனை பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தப் பணி குறித்து நான் மிகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.