“கோலி விக்கெட்டை எடுக்கும் போதே தெரிஞ்சிருச்சு” – தோல்விக்கு பின் ஸ்ரீலங்கா கேப்டன் தஷன் சனக்கா பேட்டி.!

0
41629

பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் விலங்கியல் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

முன்னதாக டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணியின் 49.1 ஓவர்களில் 213 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரண்களும் இஸான் கிஷான் 33 ரண்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டரான தனஞ்செயா டிசில்வா 41 ரண்களும் வெல்லலாகே 42 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு புள்ளிகளை பெற்ற இந்திய அணி இந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 17ஆம் தேதி இந்திய அணியுடன் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் தஷன் சனக்கா” ஆடுகளம் இவ்வாறு பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் களம் இறங்கிய பிறகு ஆடுகளத்திற்கு ஏற்றவாறு எங்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டோம். வெல்லலாகே, தனஞ்செயா மற்றும் அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர்” என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எங்கள் அணியில் இருக்கும் சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் வலை பயிற்சியின் போது சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுடைய பொட்டன்ஷியல் என்ன என்று எனக்குத் தெரியும் . அதனால் இன்றைய போட்டியில் அவர்களை பயன்படுத்தினேன். வெல்லலாகே பங்களாதேஷ் அணியுடன் போட்டியின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் ஸ்பெஷல் ஆக ஏதாவது ஒன்றை செய்வார் என்று எதிர்பார்த்தேன்.

“அதேபோல விராட் கோலியின் விக்கெட்டைநேற்றைய போட்டியில் வீழ்த்தினார். அப்போதே எனக்குத் தெரிந்தது இந்த நாள் அவருடைய நாளாக இருக்கும் என்று.அதனைத் தொடர்ந்து மேலும் சில விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என தெரிவித்திருக்கிறார்” இலங்கை அணியின் கேப்டன் சனக்கா. மேலும் வெல்லலாகே பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 46 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பௌண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும்.