“நீ அங்க இருந்து எப்ப ஓடி வந்து.. எப்ப பந்து போடறது?” – சேவாக் அக்தர் சுவாரசியமான பேச்சு

0
684
Sehwag

பாகிஸ்தான் அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் 90களின் பிற்பகுதியில் அறிமுகமான பொழுது உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அதிர்வு இருந்தது.

மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேலான வேகம், நீண்ட தூர ரன் அப் மேலும் உயரமான திடகாத்திரமான அவரது உடல்வாகு, நீண்ட தலைமுடி என, வேகப்பந்துவீச்சுக்கான முழுக் கவர்ச்சியும் அவரிடம் இருந்தது.

- Advertisement -

அவர் பந்தை சுமந்து கொண்டு வரும் அந்த ரன் அப்பில், அப்போது கிரிக்கெட்டைப் பார்த்தவர்களுக்கு அந்தப் பந்து என்ன செய்யப் போகிறதோ என்கின்ற பதைப்பு நிச்சயம் இருக்கும்.

பார்ப்பவர்களுக்கு இப்படி இருக்கும் பொழுது அவரை நின்று எதிர்த்து விளையாட கூடியவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர் நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வருவதற்குள், நின்று கொண்டிருப்பவர் தேவையில்லாததை எல்லாம் யோசித்து, மனரீதியாகக் கவலை அடைந்து விடுவார்.

சச்சினை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்தில் ஆட்டம் இழக்க வைத்த பெருமை இவருக்குத்தான் இருக்கிறது. அதேபோல் தனது வேகத்தால் உலகின் திறமையான எல்லா பேட்ஸ்மேன்களையும் இவர் தடுமாற வைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இவரது அறிமுக காலத்திற்குப் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் சச்சின் ராகுல் டிராவிட், சேவாக் போன்றவர்கள், இவரது பந்துவீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது சவுதி அரேபியாவில் டி20 கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு வர்ணனையாளர்களாக சேவாக் மற்றும் அக்தர் இருவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது அக்தர் தான் அவ்வளவு தூரத்தில் இருந்து பந்து வீச ஓடி வருவது கவனச் சிதறலை உண்டாக்கவில்லையா? என்று சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சேவாக் “அந்த நேரத்தில் நிறைய எண்ணங்கள் மனதில் ஓடும். எனது கால் கட்டை விரலிலா அல்லது என் தலைக்கு பீமர் அடிக்கப் போகிறாரா, இல்லை வேறு எங்காவது அடிக்கப் போகிறாரா? நினைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.