இந்தியாவின் தோல்விக்கு ஃபீல் பண்ணாதிங்க.. விரைவில் வரும் புது உலககோப்பை.. எப்போது? எங்கே? முழு விபரம்

0
25766

2023 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இறுதி போட்டி வரை வந்து ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி விட்டார்கள். இந்த நிலையில் இந்திய அணி கடைசியாக ஐசிசி கோப்பையில் வென்றது 2013 ஆம் ஆண்டில் ஆகும்.

அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு கோப்பையும் ஐசிசி வெல்லவில்லை. இந்த நிலையில் அடுத்த ஐசிசி தொடர் எங்கு நடைபெறுகிறது. எப்போது என்ற விவரங்களை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

அடுத்ததாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடர் ஜூன் நான்காம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் முன் எப்போதும் இல்லாத வகையில் 20 அணிகள் பங்கேற்க உள்ளது.

ஐசிசி போட்டிகள் முதல்முறையாக அமெரிக்காவில் நடத்தப்படுகிறது அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டம் நியூயார்கில் நடக்க உள்ளது. இதற்காக பிரத்தியேக மைதானம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த 20 அணிகளும் நான்கு குரூப்பாக பிரிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் மோதும். இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும். இந்த சூப்பர் 8 சுற்று நான்கு நான்காக இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் இரு குரூப்பிலும் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணி அரை இறுதிச்சுற்றுக்கு செல்லும்.

- Advertisement -

டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது பிரபலமாகி வரும் நிலையில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது. இதுவரை இந்த தொடரில் 12 அணிகள். தகுதி பெற்றிருக்கின்றன. அவை, ஆப்கானிஸ்தான் ,ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஆகும்.  எஞ்சியுள்ள எட்டு இடங்களை தீர்மானிக்கும் போட்டிகள் வரும் ஆண்டில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.