“இங்கிலாந்து எப்படியோ விளையாடட்டும் எனக்கென்ன?.. என் கவனம் வேற..!” – ரோகித் சர்மா அதிரடி பேச்சு

0
199
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான பிளேயிங் லெவனை அதிரடியாக இங்கிலாந்து இன்றே அறிவித்து விட்டது. இதில் ஆச்சரியப்படும் விதமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்படவில்லை.

மேலும் நாளை போட்டி துவங்க இருக்கின்ற காரணத்தினால் இரு அணிகளின் கேப்டன்களும் சம்பிரதாயமான முறையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பல கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த வகையில் இது அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்து முடித்திருக்கிறார். அதில் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியின் இடத்திற்கு சீனியர் வீரர்களை முதலில் யோசித்ததாகவும், பிறகு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதற்கு முடிவு செய்து இருப்பதாகவும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் அவரிடம் இங்கிலாந்து தற்பொழுது அதிரடியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருவது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு ரோகித் சர்மா தன்னுடைய பாணியில் பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரோகித் சர்மா பேசிய பொழுது “நாங்கள் எங்கள் கிரிக்கெட்டைத்தான் விளையாட போகிறோம். எதிரணி என்ன செய்கிறார்கள் என்பது குறித்து கவலை கிடையாது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு ஆர்வமும் கிடையாது. ஒரு அணியாக நாம் என்ன செய்கிறோம் என்று பார்க்க வேண்டும். அதில்தான் நம்முடைய கவனம் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : “கில் ஜெய்ஸ்வாலை நினைச்சா கஷ்டமா இருக்கு.. நீங்களே பார்த்து பண்ணுங்க” – நியூசிலாந்து லெஜன்ட் பேச்சு

எங்கள் அணியில் தற்போது கே.எஸ்.பரத் மற்றும் ஜுரல் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடைய செயல் திறனை பார்த்து முடிவு செய்வோம். எந்த வீரருக்கும் அதிக வாய்ப்புகள் தர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் நிலைமைகள் படி யார் விளையாட வேண்டுமோ அவர்களுக்கே முன்னுரிமை தருகிறோம். இதனால் நாங்கள் ஒரு போட்டிக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று மதிப்பாய்வு செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்