” நான் எது சொன்னாலும் பிரச்சனை ஆக்கிறாங்க அதனால தனியாவே இருந்துக்கிறேன்” – பிரித்வி ஷா மனம் வருந்திய பேட்டி!

0
388

இந்திய அணியின் இளம் வீரர் ப்ரீத்வி ஷா. மும்பை வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் காண்பதற்கு முன்பே இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக கணிக்கப்பட்டவர். இவரது தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை கைப்பற்றியது.

அதே ஆண்டிலேயே இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட்டை சதத்துடன் தொடங்கினார். மேலும் பல்வேறு சாதனைகளை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தொடர்ச்சியாக அவுட் ஆப் ஃபார்மில் இருந்ததாலும் சில டெக்னிக்கல் தவறுகள் இவர் ஆட்டத்தில் இருந்ததாலும் இந்திய அணியில் நீண்ட காலம் இவரால் தொடர முடியவில்லை.

- Advertisement -

2022-23 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 379 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே இன்னிங்சில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ப்ரீத்வி ஷா. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவை சார்ந்த பிபி நிம்பல்கர் 443″ ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

ப்ரீத்தி ஷா திறமையான வீரராக இருந்தாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட போஜ்பூரி நடிகையுடன் செல்பி எடுப்பது தொடர்பான சிக்கலில் மாட்டிக் கொண்டார் என்பதும் நாம் அறிந்ததே. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும் பிரித்வி ஷாவிற்கு மோசமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது . இந்த சீசனில் எட்டு போட்டிகளில் ஆடி ஆவார் 16 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் நார்த்தம்டன்சைர் அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ப்ரித்வி ஷா. இந்த அணிக்காக டெஸ்ட் போட்டிகள் மற்றும் ராயல் லண்டன் ஒருநாள் தொடரிலும் ஆட இருக்கிறார். இதற்காக தயாராகிக் கொண்டு வரும் பிரீத்திஷா க்ரிக்பஸ் மற்றும் விஸ்டன் இணையதளங்களுக்கு அளித்த பேட்டியில் தனது இந்திய வாய்ப்பு மற்றும் தற்போது அவர் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அந்தப் பேட்டியில் தனது கருத்தை பதிவு செய்திருக்கும் ப்ரீத்தி ஷா ” இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டபோது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் . ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்காக யாரும் என்னிடம் எந்த காரணங்களையும் கூறவில்லை . சிலர் நான் ஃபிட்டாக இல்லை என்று தெரிவித்தார்கள். தேசிய கிரிக்கெட் அகாடமியில் எல்லா பிட்னஸ் தேர்வுகளையும் கிளியர் செய்துவிட்டு தான் இந்திய அணிக்கு தேர்வாக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இந்திய டி20 அணியில் இடம் பெற்றேன் ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் எனக்கு இடமில்லை . இது வருத்தமாகத்தான் இருக்கிறது ஆனாலும் இதனை கடந்து முன் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் யாரிடமும் நட்பு கொள்ளாமல் தனிமையில் இருக்கவே விரும்புகிறேன் . எனக்கு எப்போதுமே நண்பர்கள் மிகவும் குறைவு தான் . இருந்தாலும் நான் யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை . நம் மனதில் இருப்பவற்ற யாரிடம் பகிர்ந்தாலும் அது சமூக வலைதளங்களில் வெளியாகி விடுகிறது . இதனால் என்னுடைய கருத்துக்களை எனக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொள்ள பார்க்கிறேன். எனக்கு ஒன்று இரண்டு நல்ல நண்பர்கள் இருந்தாலும் அவர்களுடனும் எந்த கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லை. உணவு அருந்தி சென்றாலும் சரி எங்கு சென்றாலும் தனிமையாக இருப்பதையே விரும்புகிறேன் . பொதுவாக எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது அதனால் எங்குமே வெளியே செல்வதையும் தவிர்த்து வருகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.