“பாகிஸ்தானில் என்ன அன்பு கிடைத்ததோ அது இந்தியாவில் கிடைக்கிறது!” – சதம் அடித்த பின் ரிஸ்வான் நெகிழ்ச்சியான பேச்சு!

0
4040
Rizwan

இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்க அணிகள் விளையாடும் போட்டி திருவனந்தபுரத்தில் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

மேலும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் பயிற்சி போட்டி தற்போது அசாம் மாநிலம் கவுகாத்திமைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று பயிற்சி போட்டியில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 345 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 94 பந்துகளில் 9 சித்தர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் எடுத்து, மற்ற பேட்ஸ்மேன்கள் விளையாடுவதற்காக வெளியேறி சென்றார்.

சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் வெளியேறிய ரிஸ்வான் பேசும் பொழுது
“சதம் என்பது சதம்தான். அதில் மகிழ்ச்சியும் பெருமையும். பாகிஸ்தானுக்கு சதம் அடிப்பது எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது. பாகிஸ்தானில் உள்ள ரசிகர்கள் எங்களை எப்படி நேசித்தார்களோ, அதேபோல விமான நிலையத்திலேயே இந்திய மக்கள் மிகுந்த அன்பை கொடுத்தார்கள். இந்தியாவில் சிறந்த முறையில் எங்களை வரவேற்றார்கள்.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக நான் ஓபன் செய்கிறேன். டெஸ்ட்டில் ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் வருகிறேன். ஒரு நாள் போட்டிகளில் நான்காம் இடங்களில் பேட்டிங் செய்கிறேன். அணியின் தேவைக்கேற்ப விளையாடுகிறேன்.

சவுத் ஷகில் சிறந்த வீரர். அவர் இன்று ஒரு கிளாசிக் நாக் விளையாடினார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அவர் சாதிப்பார் என்று நம்புகிறேன். நானும் பாபரும் ஸ்ட்ரைக்கை சுழற்ற முயற்சி செய்கிறோம். எங்களுக்குள் தொடர்பு நன்றாக இருக்கிறது. அது எங்களுக்கு உதவுகிறது!” என்று கூறி இருக்கிறார்!