பாகிஸ்தான் கோச் பொறுப்பு 16.70 கோடி சம்பளம்.. மறுத்த வாட்சன்.. உண்மை காரணம் என்ன?

0
131
Watson

இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்த காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்றும் வாரியத்தில் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர்கள் அடுத்து வரவிருக்கின்ற டி20 உலக கோப்பையை மனதில் வைத்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை தேடி வருகிறார்கள். வெளிநாட்டு பயிற்சியாளர்களை கொண்டு வருவதின் மூலம், உலகக் கோப்பையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் சரிவில் இருந்து மீண்டு வர முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது.

- Advertisement -

இதன் அடிப்படையில் முதலில் இரண்டு டி20 உலக கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் டேரன் சமியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் தற்போது மூன்றாவது முறையாக வெஸ்ட் இண்டிஸ் தனது சொந்த மண்ணில் டி20 உலக கோப்பையை வெல்வதற்காக, வெஸ்ட் இண்டீஸ் வெள்ளை பந்து கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சேன் வாட்சனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுப்பியது. அவர் அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் இரண்டு மில்லியன் டாலர்கள் சம்பளம் கேட்க முதலில் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்பு அந்த சம்பளத்திற்கு சம்மதித்திருக்கிறது. இந்திய மதிப்பில் 16.70 கோடி ரூபாய் ஆண்டுக்கு சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் கூட நிரந்தர வீரர்களுக்கு இவ்வளவு சம்பளம் கிடையாது.

எனவே சேன் வாட்சன் கூடிய விரைவில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக வெள்ளைப் பந்து கிரிக்கெட் வருவார் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்தார்கள். வாட்சன் முன் வைத்த எல்லா நிபந்தனைகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சேன் வாட்சன் பயிற்சியாளர் பதவியை நிராகரித்த காரணம்

இப்படியான நிலையில் பேன் வாட்சன் பாகிஸ்தான் வெள்ளை பந்து கிரிக்கெட் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராக வருவதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டதாக செய்திகள் கூறுகிறது. இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதித்தும் அவர் வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : கேஎல்.ராகுல் என்கிட்ட சொன்ன ரகசியம்.. ஐபிஎல் டீம் இப்படித்தான் செட் பண்ணனும் – அஸ்வின் பேச்சு

தற்பொழுது ஏன் அவர் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்கின்ற உண்மை காரணம் வெளிவந்திருக்கிறது. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் பேசிய சம்பள பேச்சு வார்த்தை, பாகிஸ்தான் மீடியாக்களில் கசிந்தது. இருவருக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தை மீடியாக்களில் வந்தது வாட்சனுக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் தனக்கு ஏற்கனவே இருக்கும் வேலைகளில் கவனம் செலுத்தவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் முடிவு செய்து இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால பயிற்சியாளரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேடி வருவதாக கூறப்படுகிறது.