பெங்களூரில் பயிற்சியில் ஆர்ச்சர்.. ஆர்சிபி அணியில் இணைகிறாரா?.. குழப்பத்திற்கு கிடைத்த பதில்

0
149
Archer

இங்கிலாந்தில் விளையாட்டு சட்டத்தையே மாற்றி அமைத்தவராக வெஸ்ட் இண்டிசை சேர்த்த வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இருக்கிறார். இவரது அதிவேக பந்துவீச்சு திறமையின் காரணமாக, 2019 ஆம் ஆண்டு இவரை இங்கிலாந்து அணிக்குள் கொண்டு வருவதற்கு, வெளிநாட்டவர் ஒருவர் இங்கிலாந்து தேசிய விளையாட்டு அணிகளில் பங்கு பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் உள்நாட்டில் விளையாட வேண்டும் என்கின்ற சட்டம் திருத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான இவர், அந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து கைப்பற்றிய அணியில் இடம் பெற்று இருந்தார். அடுத்து ஆசஸ் தொடரில் இவரது அபாயகரமான பந்துவீச்சில் ஸ்மித், லபுசேன் போன்றவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து முழங்கை பாதிப்பு ஏற்பட்ட இவர், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். மும்பை இந்தியன்ஸ் அணி எட்டு கோடி ரூபாய் கொடுத்து, இவர் அந்த வருடம் விளையாட மாட்டார் என்று தெரிந்தும் வாங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐந்து போட்டிகளில் மட்டும் விளையாடி இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு இவரை கழட்டிவிட்டது. மேலும் இவர் ஏலத்திலும் விலை போகவில்லை.

இந்த நிலையில் தற்பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் தன்னுடைய கவுண்டி அணியான சசக்ஸ் அணியுடன் இணைந்து பெங்களூரு மாநகரத்தில் ஆலூரில் அமைந்திருக்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் பயிற்சி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இதற்கும் அவர் ஆர்சிபி அணியில் இணைவாரா என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இதன் காரணமாக இந்த முறை ஏலத்தில் விற்கப்படாத இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்க இருப்பதாக ரசிகர்கள் தவறாக குழப்பம் அடைந்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து, வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையை ஒத்திருக்கும், இந்தியாவில் இங்கிலாந்து உள்நாட்டு அணிகள் பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து உள்நாட்டு அணியான லங்காசையர் அணியும் பெங்களூரில் முகாமிட்டு இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறும் பொழுது ” ஐபிஎல் தொடர் நடக்கும் மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் விளையாடாமல் இங்கிலாந்தில் இருந்தால், அவர் காயத்தில் இருந்து திரும்பி வருவதற்கு சுலபமாக இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் விராட் கோலி நீக்கம் பற்றிய பேச்சு – காய்ச்சி எடுத்த ஸ்ரீகாந்த்

அவர் மீண்டும் உடன் தகுதி பெற்று இங்கிலாந்துக்காக விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் முக்கியமான ஆசஸ் தொடர் மற்றும் t20 உலக கோப்பை போன்றவைகள் இருக்கிறது. இதற்கு அவர் மிகவும் முக்கியமான வீரராக இங்கிலாந்துக்கு தேவைப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.