டி20 உலக கோப்பையில் விராட் கோலி நீக்கம் பற்றிய சர்ச்சை – காய்ச்சி எடுத்த ஸ்ரீகாந்த்

0
949
Virat

இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது.

ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான டி20 தொடரில் 14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் பேட்ஸ்மேனாக விராட் கோலியின் திரும்ப அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவால் அழைக்கப்பட்டார்கள். அதற்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய டி20 அணி அமைக்கப்பட்டிருந்தது. திடீரென இவர்கள் அழைக்கப்பட்டது எல்லோருக்கும் ஆச்சரியமாகவே இருந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சில நாட்களாக, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்க அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு விரும்பவில்லை என்பதற்கான செய்திகள் தீபோல பரவி வந்தது. இது விராட் கோலியின் ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை உண்டு செய்து இருந்தாலும், அதே நேரத்தில் அணிக்குள் கொண்டு வந்த அவர்களே தற்போது அவரை ஏன் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தார்கள்.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரராக விராட் கோலிதான் இருந்தார். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனி வீரராக யாரும் எதிர்பார்க்காத வகையில் விளையாடி இந்திய அணியை அரை இறுதிக்கு அவர்தான் கூட்டி சென்றார். மேலும் டி20 கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் அவரிடம் எக்கச்சக்கமான சாதனைகள் இருக்கிறது. இதேபோல் டி20 உலகக்கோப்பை தொடர்பாகவும் அவரிடம் நிறைய சாதனைகள் இருக்கிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும் என்று கூறப்படும் பொழுது, அங்கு மூன்றாவது இடத்தில் விராட் கோலி போன்று ஆட்டத்தை நகர்த்திச் சென்று விளையாட கூடிய உலகத்தரமான பேட்ஸ்மேன் தேவை இருக்கும் பொழுது, திடீரென இப்படியான செய்திகள் பரவி வருவது பலருக்கும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பாக இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “டி20 உலக கோப்பையில் விராட் கோலி இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. 2022ஆம் ஆண்டு அவர்தான் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றவர். அவர்தான் மேன் ஆஃப் த டோர்னமெண்ட். இதையெல்லாம் யார் சொல்வது? இப்படியான வதந்திகளை யார் பரப்புவது? இதற்கெல்லாம் என்ன அடிப்படை இருக்கிறது? டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி அணியில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : தோனி ஹீரோவானது மீடியாவால்தான்.. கம்பீர் பேச்சை ஆதரித்த இந்திய முன்னாள் வீரர்.. மீண்டும் சலசலப்பு

நமக்கு களத்தில் தங்கி விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் தேவை. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோ அல்லது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையும் ஒரு ஆங்கர் ரோல் செய்யக்கூடிய பேட்ஸ்மேன் தேவை. விராட் கோலி இல்லாமல் இந்திய அணி உலக கோப்பைக்கு செல்லாது. 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் சச்சின் எப்படி இருந்தாரோ விராட் கோலியும் அப்படி இருக்க வேண்டும். சச்சினுக்கு நடந்தது விராட் கோலிக்கும் நடக்க வேண்டும். அவர் உலகக் கோப்பையை வென்றால் மிகப் பெரிய விஷயமாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.