சூர்யாவுக்கு இந்த வீக்னஸ் இருக்கு.. உலககோப்பையில் கூட இதைத்தான் குறி வச்சாங்க – அம்பதி ராயுடு விளக்கம்

0
16
Surya

டி20 உலகக்கோப்பை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த உலகக்கோப்பை இந்தியனையில் இடம் பெற்று இருக்கும் இந்திய வீரர்களின் பேட்டிங் செயல்பாடு ஐபிஎல் தொடரில் திடீரென மிகவும் மோசமாக அமைந்து விடுகிறது. இந்த வகையில் கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று சூரிய குமாருக்கு அமைக்கப்பட்ட திட்டம் குறித்து அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மழையால் குறைக்கப்பட்ட 16 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. ஓவருக்கு பத்து ரன்கள் வீதம், 10 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால், மும்பை அணி இதை எட்டி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப மும்பை அணியும் முதல் ஏழு ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 65 ரன்கள் எடுத்தது. ஆனால் இதற்கு அடுத்து ரோகித் சர்மா 23 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஷாட் செலக்சன் காரணமாக ஆட்டம் இழந்தார். இதேபோல் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த சூரிய குமாரும் தவறான முறையில் ஷாட்டை தேர்வு செய்து ஆட்டம் இழந்தார்.

இவர்கள் இருவரும் விக்கெட் கொடுத்து அடுத்து வந்த டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, மொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணி சிக்கி 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்த போட்டியில் ரசல் சூரியகுமார் யாதவுக்கு ஆப்சைட் வெளியே பந்தை மெதுவாக வீசி, அதை லெக் சைடு அடிக்கும்படி தூண்டினார்.பந்தில் வேகம் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும், ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு எடுத்து பந்தை அடிப்பதால் மைதானத்தின் நீளம் அதிகரிப்பதாலும், சூரியகுமார் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது “சூரியகுமார் யாதவுக்கு எதிராக பந்து வீசுவது தொடர்பாக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்கள். அது ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வைடாக அதே சமயத்தில் பந்தை மெதுவாக வீசுவதுதான் அந்தத் திட்டம். உலகக் கோப்பையிலும் சூரிய குமாருக்கு இதே போன்ற திட்டத்தைதான் வைத்திருந்தார்கள். ஒருபுறம் மைதானத்தில் பெரிதாக இருக்கும் பொழுது இப்படி சூரிய குமாருக்கு திட்டம் வகுக்கப்படுகிறது. அவர் இதில் கட்டாயம் வேலை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : ரோகித் சூர்யா ஈகோ எதுக்கு.. பெரிய ஆளா இருந்தா நல்ல பவுலிங்கை மதிக்க கூடாதா?.. சேவாக் விமர்சனம்

சுழல் பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடும் திறன் இல்லாத காரணத்தினால் மும்பை தோல்வி அடைந்தது. ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது அதேபோல பந்து கொஞ்சம் ஹோல்ட் ஆகி வந்தது. ஷாட் தேர்வு மோசமாக இருந்ததால் தோல்வி அடைந்து விட்டார்கள். ரோகித் சர்மா நேராக விளையாடுவதில் மிகச் சிறப்பானவர். ஆனால் நேற்று அவர் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து ஆட்டம் இழந்தார்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -