தோனி பாயிடம் நான் ஐடியா கேட்டதில்லை.. அவர் எனக்கு சொன்னது இந்த சில விஷயங்கள்தான் – ருதுராஜ் பேட்டி

0
949
Ruturaj

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிக் கொள்ள புதிய கேப்டனாக ருதுராஜ் கொண்டுவரப்பட்டார். இதில் சிறப்பு என்னவென்றால் புதிய கேப்டனாக அவரை தேர்ந்தெடுத்ததும் தோனிதான். இந்த நிலையில் கேப்டன் குரூப்பை எடுத்துக் கொள்ளும் பொழுது தோனி என்ன மாதிரியான அறிவுரைகள் கூறியிருந்தார்? என ருதுராஜ் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்கின்ற பெயருக்கு சொந்தக்காரர் மகேந்திர சிங் தோனி. இதுவரை அதிக முறை பிளே ஆப் சுற்று, அதிக முறை இறுதிப்போட்டி, அதிக கோப்பைகள் என கேப்டனாக கைவசம் அவரிடம் நிறைய தனித்த சாதனைகள் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கடைசியாக அவருடைய கிரிக்கெட் கேரியரில் அமையும் என்பதால் புதிய கேப்டனையும் அவரே தொலைநோக்காக எதிர்காலத்தின் தேவை கருதி கொண்டு வந்தார். தற்போது இது குறித்து புதிய கேப்டன் ருதுராஜ் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது ” கடந்த ஆண்டில் நான் கேப்டனாக இருந்தால் குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன மாதிரி பீல்டிங்கை அமைப்பேன், என்ன முடிவுகள் எடுப்பேன் என்று ஒவ்வொரு போட்டியிலும் யோசித்துக் கொண்டிருந்தேன். கேப்டனாக நான் பொறுப்பை எடுத்துக் கொண்டதில் இருந்து, நான் அவரிடம் ஆலோசனைகள் கேட்டதில்லை என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் என்னிடம் கண்டிப்பாக ஒரு விஷயத்தை சொன்னார். அது ‘நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அது உங்களுடைய சொந்த முடிவாக இருக்க வேண்டும். மேலும் அந்த முடிவுக்கு நீங்களே முழுமையாக பொறுப்பு ஏற்க வேண்டும். நான் எதிலும் தலையிட போவது கிடையாது. பீல்டிங் கோணங்கள் மட்டும் சரியாக இருக்கிறதா? என்று பார்ப்பேன், மேலும் 50 க்கு 50 ஏதாவது சொல்வேன்’ என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க இந்த உண்மையை ஏத்துக்கிறோம்.. மோசமான அந்த தப்பை பண்ணிட்டே இருந்தோம் – பியூஸ் சாவ்லா பேச்சு

நான் எந்த பீல்டிங் பொசிஷனை மாற்றினாலும் கூட இயல்பாகவே அவரைப் பார்க்கிறேன் என்று நினைக்கிறேன். அவரும் என் மீது ஒரு கண் வைத்திருப்பதை உறுதி செய்து கொள்கிறார். மேலும் அவர் என்னிடம் ‘நான் ஏதாவது சொன்னால், அதை கட்டாயம் நீங்கள் பின்பற்றியே ஆக வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கூறியிருந்தார்” என்று தெரிவித்திருக்கிறார்.