“ப்ரீத்திவி ஷா தொடர்ந்து சொதப்பி வருவதற்கான காரணம் என்ன”? – ப்ரீத்வி ஷாவின் ஆரம்ப கால பயிற்சியாளர் விளக்கம்!

0
227

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தப் போட்டி தொடரில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது .

இதுவரை ஒவ்வொரு அணிகளுக்கும் 7 போட்டிகளுக்கு மேல் முடிவு பெற்ற நிலையில் இரண்டு வெற்றிகளுடன் டெல்லி அணி பத்தாவது இடத்திலும் அதே இரண்டு வெற்றிகள் உடன் ஹைதராபாத் அணி ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது . கடந்த சில சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணிக்கு இந்த வருடம் சறுக்கலாக அமைந்துள்ளது

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய நிலையில் இந்த வருட போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை . அதன் காரணமாக டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் . டெல்லி அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை கேப்டன் வார்னர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர் . இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா தொடர்ந்து மோசமான துவக்கத்தையே கொடுத்து வந்தார் . இதன் காரணமாக ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்

இந்த வருட ஐபிஎல் தொடர்களில் ஆறு போட்டியில் ஆடி இருக்கும் அவர் 47 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவரது சராசரி 7.83 ஆகும் . அதிகபட்சமாக எடுத்த ரன்கள் 15 மட்டுமே. இந்தத் தொடருக்கு முன்பாக அவர் ரஞ்சிப் போட்டிகளிலும் விஜய் ஹசாரே தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக சொதப்பி வருகிறார்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் ஷெட்டி” அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது அவருடைய மனநிலையும் எனது மனநிலையும் முதலில் ஒரு சில போட்டிகளில் ஒத்துப் போகவே இல்லை . ஆனால் அவரது ஆட்டத்தை இப்படித்தான் பல ஆண்டுகளாக அவர் ஆடி வருகிறார் . எப்போதுமே ரிஸ்க் எடுப்பதை விரும்பும் வீரர் அவர் . இவர் போன்ற வீரர்களுக்கு முதலில் இருக்கும் ஒரு சில போட்டிகள் முக்கியமானவை என தெரிவித்துள்ளார் .

- Advertisement -

மேலும் இது பற்றி பேசி இருக்கும் பயிற்சியாளர் ” ஒரு அணிக்கு எப்படி துவக்கம் முக்கியமோ அதுபோல ப்ரீத்வி ஷாவிற்கும் முதல் இரண்டு போட்டிகளில் கிடைக்கும் துவக்கம் முக்கியமானது . அவருக்கு தேவை எல்லாம் ஒரு தொடக்கம் தான் . அவருக்கு தேவையான தொடக்கம் கிடைக்கவில்லை இதனால் அவர் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது . நன்றாகத்தான் ஆடி வருகிறார் பிரித்விஷா ஆனால் ஒரு பேட்ஸ்மனை ஆட்டம் விளக்கு செய்ய ஒரு நல்ல பந்து போதும் என தெரிவித்துள்ளார் .