கடைசி ஓவர் 19 ரன்.. பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தியது இளம் நியூசிலாந்து அணி.. தொடர் தோல்வி

0
3763
Pakistan

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நியூசிலாந்தின் இரண்டாம் கட்ட அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து, அனுபவம் இல்லாத நியூசிலாந்து அணி வென்று ஆச்சரியப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்த தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட, இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும், மூன்றாவது போட்டியை நியூசிலாந்து அணியும் வென்றன. இந்த நிலையில் தொடரின் நான்காவது போட்டி இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிம் ராபின்சன் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள், மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் டாம் ப்ளுண்டல் 15 பந்தில் 5 பவுண்டரிகள் உடன் 25 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 26 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பிரேஸ்வெல் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் அப்பாஸ் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றினார். இந்த போட்டியை வென்றால் மட்டுமே, தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் இலக்கை நோக்கி விளையாடியது.

ரன் துரத்தலில் இளம் துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். கேப்டன் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 4 பந்தில் 5 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து பகார் ஜமான் சிறப்பாக போராடி 45 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். மேல் வரிசையில் இருந்து பெரிய ரன்கள் பாகிஸ்தான் அணிக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : சின்னசாமி மைதானம்தான் எங்களுக்கு பெரிய பிரச்சனையே.. ஆனா நைட் நிம்மதியா தூங்கலாம் – பாப் டு பிளேசிஸ் பேச்சு

இந்த நிலையில் கீழ் வரிசை பேட்டிங்கில் இப்திகார் அகமது 20 பந்தில் 23 ரன், இமாத் வாசிம் ஆட்டம் இழக்காமல் 11 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி பரபரப்பான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது 2-1 தொடரில் என முன்னிலை வகிக்கிறது. கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியை பாகிஸ்தான் வென்றாலும் தொடரை வெல்ல முடியாது. இளம் நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோற்று மீண்டும் விமர்சனங்களை சந்திக்கிறது.