சின்னசாமி மைதானம்தான் எங்களுக்கு பெரிய பிரச்சனையே.. ஆனா நைட் நிம்மதியா தூங்கலாம் – பாப் டு பிளேசிஸ் பேச்சு

0
660
Faf

நடத்து ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கடந்த ஒரு மாதமாக வெற்றி பெறாமல் தத்தளித்து வந்த அந்த அணி, இன்று நடந்த போட்டியில் 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிக்கான காரணங்கள் குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி அதிரடியான ஹைதராபாத் அணியை முதலில் பேட்டிங் செய்ய விடாமல் தடுப்பதற்காக, பனிப்பொழிவு பற்றி கவலைப்படாமல் தைரியமாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்த தைரியமான முடிவிற்கு அந்த அணிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 51 ரன், ரஜத் பட்டிதார் 50 ரன், கேமரூன் கிரீன் 37 ரன் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆர்சிபி அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இன்றைய போட்டியில் உனட்கட் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அதிரடி வீரர் ஹெட்இல்லாமல் வெளியேற, கடைசி கட்டத்தில் தாக்குப்பிடித்து விளையாடி 37 பந்தில் ஷாபாஷ் அகமது மட்டும் 40 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளேசிஸ் கூறும்பொழுது “கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அறிகுறிகளை கண்டோம். ஹைதராபாத் அணிக்கு எதிராக 270 ரன்களுக்கு மேலான இலக்கைத் துரத்தி 260 ரன்கள் எடுத்தோம். கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். ஆனால் தனியாக நீங்கள் நம்பிக்கையை பெற வெற்றி பெற வேண்டும். போலியாக அணியினருக்கு நம்பிக்கையை கொடுக்க முடியாது. இங்கு போட்டி மிக அதிகமாக இருக்கிறது. 100% கொடுக்காவிட்டால் தோல்வியடைவீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க எங்கள வேற மாதிரி நினைச்சிருந்தோம்.. ஆனா என்ன நடந்தாலும் எங்க ரூட் மாறாது – பாட் கம்மின்ஸ் பேட்டி

இப்போது எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ரன்கள் அடிக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் விராட் கோலி மட்டுமே ரன்கள் எடுத்து வந்தார். இன்று கேமரூன் கிரீன் எடுத்த ரன்கள் அவருக்கு பெரிய விஷயமாக இருக்கும். சின்னசாமி மைதானம் எங்களுக்கு பெரிய ஏமாற்றம் என்பதை அறிவோம். பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான இடம். அதற்கான செய்முறைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஆனாலும் அது கடினமானது” என்று கூறியிருக்கிறார்.