“முகமது சிராஜ சமாளிக்க என்ன பிளான் இருக்கு?” – பேட் கம்மின்ஸ் சொன்ன ஆச்சரியமான பதில்!

0
4649
Siraj

ஆஸ்திரேலியா அணி நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒரு அணியாக கணிக்கப்படுகின்ற பலமான அணி.

உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

- Advertisement -

இந்தத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ், ஸ்மித், ஸ்டார்க், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகினார்கள்.

கேப்டன் பொறுப்பேற்ற மிட்சல் மார்ஸ் முதல் இரண்டு ஆட்டங்களை அபாரமாக வென்று கடைசி மூன்று ஆட்டங்களை எதிர்பார்க்காத விதத்தில் தோற்று தொடரை இழந்தார். மேலும் நான்காவது போட்டியில் டிராவிஸ் ஹெட் கைவிரல் உடைந்து, உலகக் கோப்பைக்கு வெளியில் சென்று இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா அணி தற்பொழுது உலக கோப்பைக்கு முன்பாக இந்தியாவில் இந்தியாவை சந்தித்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு எல்லா நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர்களும் திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆசியக் கோப்பையில் மிகச் சிறப்பான வெற்றி பெற்ற இந்திய அணி, முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து, தேவைப்படும் இடத்துக்கு பரிசோதனை முயற்சி செய்ய ஆஸ்திரேலிய தொடரை பயன்படுத்தும் அளவுக்கு நம்பிக்கையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியில் மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முகமது சிராஜை சந்திக்க சிறப்பு திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் இடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு சிறிய சிரிப்போடு எந்த திட்டமும் இல்லை என்று, ஒரு வார்த்தையில் “நோ” என்று முடித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய பேட் கம்மின்ஸ்
“இந்திய சூழலுடன் பழகுவதற்கும், சில வெற்றிகளை பெறுவதற்கும் நாங்கள் ஒரு சமநிலையை அடைய விரும்புகிறோம். எந்தவித தயாரிப்புகளும் இல்லாமல் உலக கோப்பையின் முதல் போட்டியை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நாங்கள் சில காம்பினேஷன்களை உருவாக்க முயற்சி செய்கிறோம். வித்தியாசமான வீரர்களைக் கொண்டு செய்ய பார்க்கிறோம். நாங்கள் விரும்பும் ஒரு கலவையை உருவாக்க நினைக்கிறோம்.

இங்கு எப்படி எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களை நான் பயன்படுத்துவது? என்று பழக விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்க தொடருக்கு இது சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆஸ்திரேலியா அணியில் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளரின் பங்கு இருக்குமா? இதுகுறித்து இன்னும் இரண்டு ஒரு நாட்களில் நல்ல பதில்களை பெறுவோம்!” என்று கூறியிருக்கிறார்!