ரோகித்-டிராவிட் காட்டிய பெருந்தன்மை.. மதிக்காத இஷான் கிஷான்.. நீக்கம் எப்படி நடந்தது?.. வெளியான தகவல்கள்

0
234
Rohit

இந்திய அணியில் தற்போது எந்த அளவிற்கு போட்டி நிலவுகிறது என்றால், இளம் வீரர் ஒருவர் ஒரு தொடரை தவறவிட்டால், பிறகு அவர் எப்பொழுது இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாத நிலைதான் இருக்கிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மனச் சோர்வு எனக் காரணம் கூறி இஷான் கிஷான் அணியை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

அதேசமயத்தில் அவர் தன்னுடைய ஓய்வைக் கழித்து விட்டு, நேராக கிரண் மோரே கிரிக்கெட் அகாடமியில் தனது ஐபிஎல் அணி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பயிற்சி பெறுவதற்காக பரோடா சென்றார்.

ஆனால் அவர் தனது மாநில அணியான ஜார்க்கண்ட் அணிக்கு ரஞ்சி தொடரின் லீக் போட்டிகளில் விளையாட வில்லை. அதே சமயத்தில் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இசான் கிஷான் தேர்வுக்கு பரிசீலனை செய்யப்படவில்லை. மேலும் வாய்ப்பு பெற்ற இரண்டு விக்கெட் கீப்பர்களில் தனது இடத்தை துருவ் ஜுரல் சந்தேகம் என்று உறுதி செய்துவிட்டார். அதுவும் கீழ் வரிசை பேட்ஸ்மேன் என்பதால், இவர் எதிர்காலத்தில் மூன்று வடிவத்திலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடினால் ஆச்சரியம் இல்லை. இசான் கிஷானுக்கு இனி இந்திய அணியில் இடம் எங்கு இருக்கிறது என்று தேடினாலும் தெரியவில்லை.

இப்படி மாறிவிட்ட சூழ்நிலையில், இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணியைத் தேர்வு செய்தபொழுது, தங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பரான இசான் கிஷானை தொடர்பு கொண்டு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர் இந்திய அணிக்கு திரும்பி வந்து விளையாடுவதற்கு தயாராக இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : “ஓபனா சொல்றேன்.. அந்த சிஎஸ்கே வீரர்தான் பியூச்சர் சூப்பர் ஸ்டார்.. செம பேட்டிங்” – நாதன் லயன் பேட்டி

இளம் வீரரின் கிரிக்கெட் எதிர்கால வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது என்பதில் இந்திய கேப்டனும் பயிற்சியாளரும் சரியான முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பை இஷான் கிஷான் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினால், தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பட்டியலிலும் இல்லை, மேலும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடம்பெறுவதற்கான சாத்திய கூறுகளும் மங்கி விட்டது. மூத்த வீரர்களின் பேச்சை அவர் கேட்டிருக்கலாம் என கூறுகிறார்கள்!

- Advertisement -