“அஷ்வின் என்ன தவறு செய்தார்?.. அவரை ஏன் இப்படியே பண்றிங்க?.. இது நல்லதுக்கு இல்ல!” – கவாஸ்கர் கொந்தளிப்பு!

0
445
Gavaskar

இன்று டெல்லியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது. அந்த அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்திய அணியில் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் சர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலே பெரிய அளவில் சமூக வலைதளத்தில் தற்பொழுது விமர்சனம் ஆகி வருகிறது. ஒன்று ரவிச்சந்திரன் அஸ்வினை அப்படியே வைத்திருக்க வேண்டும் இல்லையென்றால் அவருடைய இடத்தில் முழுமையான பந்துவீச்சாளர் முகமது சமியை சேர்த்திருக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் அடுத்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியில் எட்டாவது இடத்தில் யார் இடம் பெறுவார்களோ, அவர்களையே விளையாட வைப்பது நல்லது என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவருடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட முக்கியமான போட்டிகளில் வெளியே வைக்கக்கூடிய நிலைமை இருந்து வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்ல காரணமாக இருந்த அவரையே கடைசி போட்டியில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் “அஸ்வின் என்ன தவறு செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் வெளியே இருக்கிறார் மற்றவர்கள் எல்லாம் விளையாடும் அணியில் உள்ளே இருக்கிறார்கள்.

இது ஒரு கடினமான முடிவு. குழுவாக நீங்கள் சிலரை வெளியேற்ற முயற்சி செய்கிறீர்கள். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முகமது சமி என்ன செய்தார் என்று பார்த்தோம். அவர் இந்திய அணியின் பக்கம் போட்டியை மாற்றினார்.

2019 ஆம் ஆண்டு இருந்த ஆப்கான் அணியில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சமியை சேர்ப்பது ஒரு நம்பிக்கை அளிக்கும் முடிவாக இருக்கும். அஸ்வினை இப்படி அணிக்கு உள்ளே வெளியே என்று அலைக்கழிப்பது, அவரை மேலும் உறுதியானதாகத்தான் மாற்றும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!