“2011 வரை தோனி என்ன நம்பினார் அதுக்குப் பிறகு அவர் மாறிட்டார்” – யுவராஜ் சிங் மனம் திறந்த பேட்டி!

0
7312
Yuvraj

இந்தியா கண்ட ஆல்ரவுண்டர்களில் கபில்தேவுக்குப் பிறகு மிகவும் தாக்கம் கொண்ட ஆல்ரவுண்டராக விளங்கியவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் யுவராஜ் சிங்!

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பைகளை வென்றதில் தனி ஒரு வீரராக மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியவர் யுவராஜ் சிங். இவரது அபாரமான ஆட்டம் அந்த இரு தொடர்களிலும் வெளிப்படாமல் இருந்திருந்தால் இந்திய அணி கோப்பையை வெல்வது என்பது கனவுதான்!

- Advertisement -

2000 ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் கென்யாவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிமுகமாகி, அந்தத் தொடரில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்து அசத்தியவர்.

அவர் காலத்தில் இந்தியா வென்ற இரண்டு உலகக் கோப்பைகளிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து அணிக்கு மிகப்பெரிய உதவிகரமான வீரராக இருந்தார்.

பின்பு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து திரும்ப மீண்டு வந்து தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுக் கொண்டார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பத்தாயிரத்திற்கு மேலான ரன்களையும் 150 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள யுவராஜ் சிங் “நான் மீண்டும் திரும்பி வந்த பொழுது விராட் கோலி என்னை ஆதரித்தார். அவரது உதவியால்தான் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினேன். இருப்பினும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கு இந்திய தேர்வாளர்கள் என்னை விரும்பவில்லை என்று மகேந்திர சிங் தோனிதான் என்னிடம் கூறினார். அவர்தான் இந்த விஷயத்தில் எனக்கு சரியான படத்தைக் காட்டினார். அவரால் முடிந்தவரை எனக்கு உதவி செய்தார்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்வரை மகேந்திர சிங் தோனி என்னை மிகவும் நம்பினார். நான் அவருடைய மிக முக்கியமான வீரராக இருந்தேன். புற்றுநோயில் இருந்து மீண்டும் திரும்பி வந்த பொழுது அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. ஆட்டம் நகர்ந்தது

மகேந்திர சிங் தோனி மாறினார். 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நான் இல்லை. ஆனால் இதற்காக நான் யாரையும் விரல் நீட்டி எதுவும் சொல்ல முடியாது. ஒரு கேப்டனால் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியாது. இங்கு அணியின் செயல்பாடுதான் ஒரு கேப்டனுக்கு முக்கியம். நான் இதையெல்லாம் மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன்!” என்று கூறியிருக்கிறார்!