என்ன ஜோக் காட்டுறிங்களா?.. எதுக்கு செய்யனும்? ஏன் மறுக்கனும்?.. சொந்த அணியை மன்கட் விவகாரத்தில் விளாசி தள்ளிய தமிம் இக்பால்!

0
810
Tamim

ஐசிசி சில மாதங்களுக்கு முன்பு பந்துவீச்சாளர் முனையில் பந்துவீச்சாளரால் முன்கூட்டியே கிரீசை தாண்டும் பேட்ஸ்மேனை செய்யப்படும் ரன் அவுட்டை அங்கீகரித்தது. ஆரம்பத்தில் விதியில் இருந்தாலும் கூட ரன் அவுட் என்கிற பெயர் அங்கீகாரம் தற்சமயம்தான் கிடைத்தது.

இந்த வகையான ரன் அவுட் விளையாட்டின் உத்வேகத்தை குறைக்கும் ஒரு அநாகரிகமான செயலாக பலரால் பார்க்கப்பட்டது. தற்பொழுதும் கூட சிலரால் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த வகையான ரன் அவுட்டை முழுதாக ஆதரிக்கக்கூடியவர். அவரே முன்னென்று இந்த மாதிரியான ரன் அவுட்டை செய்பவர். ஐபிஎல் தொடரில் பட்லருக்கு எதிராக அவர் செய்தது பெரிய சர்ச்சையாக மாறியது. ஆனால் அவர் அவருடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

அதே சமயத்தில் இங்கிலாந்து ஒட்டுமொத்த அணியும் இந்த வகையான ரன் அவுட்டை கடுமையாக எதிர்க்கக் கூடியவர்கள். அவர்களும் இந்த வகையான ரன் அவுட்டை யாருக்கும் செய்வது கிடையாது. இதனால் அவர்கள் எப்பொழுதும் இந்த ரன் அவுட்டை செய்யக்கூடிய வீரர்,வீராங்கனைகளை விமர்சித்தே வந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் நேற்று பங்களாதேஷ் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேநடந்த போட்டியில், பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் முகமதால், நியூசிலாந்து அணியின் இஷ் சோதி ரன் அவுட் செய்யப்பட்டார். ஆனால் பங்களாதேஷ் அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் அந்த ரன் அவுட்டை மறுத்து, இஷ் சோதியை திரும்ப வர அழைத்தார். இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது. இதனால் மேற்கொண்டு 30 ரன்கள் நியூசிலாந்து சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பங்களாதேஷ் அணியில் விளையாடி வரும் தமிம் இக்பால் கூறும்பொழுது
“அதில் நான் எதையும் தவறாக பார்க்கவில்லை. நாம் அப்படி யாரையாவது அவுட் செய்தால், இல்லை நம்மில் யாராவது அவுட் ஆக்கப்பட்டால், நாம் நினைப்பது போல தவறாக எதையும் மக்கள் இப்பொழுது நினைப்பது கிடையாது.

இதை அணியின் முடிவு என்று நான் நினைக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் நிச்சயம் கலந்து பேசுவோம். இப்படி விக்கெட் வீழ்த்துவது அணியின் முடிவு என்றால் நாங்கள் அதைச் செய்வோம்.

நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால் முதலில் நாங்கள் அதற்கு முயற்சி செய்யக் கூடாது. அப்படி முயற்சி செய்து அவுட் செய்த பிறகு அதை திரும்பப் பெறுவது நல்லதான ஒன்றாக நான் நினைக்கவில்லை. ஒன்று அவுட் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதற்கு முயற்சிக்கவே கூடாது!” என்று கூறியிருக்கிறார்!