“இது என்ன இறுதி போட்டி!” – ஆஸ்திரேலியாவுக்கு பாபர் அசாம் வெளியிட்டுள்ள சிறப்பான வாழ்த்துச் செய்தி!

0
9345
Babar

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த கிரிக்கெட் திருவிழாவான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் முழுக்க மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணியாக இந்திய அணியே இருந்தது. தோல்வியே அடையாமல் இந்திய அணி 10 வெற்றிகளை பெற்றது. இந்த வகையில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இது தனி சாதனையாக இந்திய கிரிக்கெட்டில் அமைந்தது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணியை எடுத்துக் கொண்டால் தங்களது முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைந்து, அப்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி மீதான விமர்சனங்கள் அப்பொழுது நிறைய வந்தது. அவர்கள் உலகக்கோப்பைக்கு அரையிறுதியில் இருக்க மாட்டார்கள் என்றும் கூட கூறப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்து ஒவ்வொரு போட்டியாக மிகச் சிறப்பாக விளையாடி விளையாடி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எப்படி இருக்குமோ அதே அளவுக்கு திரும்பி வந்து, நேற்று உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆஸ்திரேலியா அணிக்கு தெரிவித்த வாழ்த்தில் கூறும் பொழுது “வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா! இறுதிப் போட்டியில் என்ன மாதிரியான ஒரு அதிரடி ஆட்டம்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!

பாகிஸ்தான அணி அடுத்து டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா பாகிஸ்தான் வந்த பொழுது கேப்டனாக இருந்தபாபர் அசாம், தற்பொழுது ஆஸ்திரேலியாவுக்கு வீரராக மட்டுமே பாகிஸ்தான் அணி உடன் செல்கிறார்!

- Advertisement -