“நாங்க மேக்ஸ்வெல்லுக்கு தேவையான எல்லா உதவியும் செஞ்சோம்!” – ஆப்கான் பயிற்சியாளர் வருத்தமான பேச்சு!

0
6241
Trott

நேற்று உலகக்கோப்பை தொடரில் அரைஇறுதி வாய்ப்புக்கான மிக முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தனி ஒரு வீரராக நின்று அரையிறுதிக்கு கூட்டி சென்றார் மேக்ஸ்வெல்!

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மேக்ஸ்வெல் தனது அதிரடி பேட்டிங் மூலம் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி பொறுப்பாக விளையாடி 291 ரன்கள் எடுத்தது. உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் சதத்தை இப்ராஹீம் ஜட்ரன் கொண்டு வந்தார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 18.3 ஓவரில் ஏழு விக்கெட் விழுந்துவிட்டது. இந்த நிலையில் களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 33 ரன்களில் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அந்த எளிய வாய்ப்பை ஆப்கானிஸ்தான் முஜிப் தவறவிட்டார்.

அதுவரை அவரது பேட்டில் பந்துகள் குத்துமதிப்பாகத்தான் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவரது பேட்டில் படுகின்ற எல்லாப் பந்துகளும், காற்றிலும் தரையிலும் பறந்து எல்லைக் கோட்டைக் கடந்து ரன்களைக் கொண்டு வந்து கொண்டே இருந்தது. 128 பந்துகளை சந்தித்து ஆட்டம் இழக்காமல் 201 ரன்கள் எடுத்து அணியையும் அனாயசமாக வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் சிக்கலாகி இருக்கிறது. நேற்றைய போட்டியில் 150 ரன்கள் ஆஸ்திரேலியா அணியை சுருட்டுவதற்கான வாய்ப்பை தவறவிடாமல் இருந்திருந்தால், அரையிறுதிக்கு தகுதி பெற்ற சரித்திர சாதனையை உருவாக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகி இருக்கும்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறும்பொழுது “இது ஒரு சந்தர்ப்பம் இதை புரிந்து கொண்டு நாம் நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தால் இந்த மாதிரியாகத்தான் நடக்கும்.

அவர் வாய்ப்புகளைப் பெற்ற பிறகு மிகவும் சுதந்திரமாக விளையாட ஆரம்பித்து விட்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடி பிறகு வேகம் எடுத்து அவர்கள் அணியை வெற்றி பெற வைத்தார்.

இது ஒரு அற்புதமான இன்னிங்ஸ் மற்றும் உலகத்தரமான இன்னிங்ஸ் என்று நான் நினைக்கிறேன். ஆமாம் நாங்கள் நிச்சயமாக அவர் சென்ற வழியில் அவருக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்தோம்!” என்று கூறியிருக்கிறார்!