தோனியும் அப்படிப்பட்ட தப்பை பண்ணீருக்காரு.. அவரு பெஸ்ட் கேப்டன்.. ஆனால் ரோகித் சர்மா செய்தால் குற்றமா? – சுனில் கவாஸ்கர் எழுப்பிய கேள்வி!

0
359

தோனி தலைமையில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. ஆனால் அதற்கு எந்தவொரு விமர்சனமும் வரவில்லை. இப்போது ரோகித் சர்மா தலைமையில் அந்த தவறு நடந்தால் மட்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுவீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்!.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாக இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி மற்ற அணிகளை விட வெற்றிகரமானதாக இருந்திருக்கிறது.

- Advertisement -

தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்திருக்கும் ஒரே அணியாக இருக்கிறது. துரதிஷ்டவசமாக கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும் அணியின் செயல்பாட்டை பாராட்டியே ஆக வேண்டும்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டாலும் தோனியை போல கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்பதால் அவர்கள் மீது விமர்சனங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. ரசிகர்களும் அடிக்கடி இவர்களை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்கிற கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டியை வென்று வரலாறு படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கேப்டன் பொறுப்பை மாற்ற வேண்டும் என்கிற கருத்துக்களை முன்வைத்து வருவதற்கு மாற்றாக தன்னுடைய கருத்தை கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

“கடந்த காலங்களில் இந்திய அணி 0-4 என்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய வரலாறும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் கேப்டன் பொறுப்பில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்தது. இப்போதும் அதுபோல தான் நடந்து வருகிறது. தொடரை இழந்தாலும் நாம் அடுத்தடுத்த போட்டியில் கேப்டன் பொறுப்பில் தொடர்வோம் என்கிற நம்பிக்கை இந்திய அணியின் கேப்டன்களிடம் இருந்து வருகிறது.” என்று கேள்வி எழுப்பினார்.

கவாஸ்கர் இப்படி பேசியது தோனியை கூறியது போல தெரிகிறது. 2011/12 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்ற இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியை சந்தித்து நாடு திரும்பியது. அதனை ஒப்பிட்டு தோனியின் கேப்டன் பொறுப்பிலும் பெரிய தவறுகள் நடந்துள்ளது. அதன்பிறகும் அவர் கேப்டன்ஷிப்பில் தொடர்ந்தார் என கவாஸ்கர் பேசினார்.