இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர்கள் அதிரடி நீக்கம்!

0
12712
Wi

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியை மாற்றி அமைப்பதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது!

இந்தச் சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. டி20 தொடருக்கான அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இவர்களது இடத்தில் இளம் வீரர் ஜெய்ஷ்வால் மற்றும் முகேஷ் குமார் இருவரும் இடம் பிடித்தார்கள்.

மேலும் அறிவிக்கப்பட்ட இரண்டு இந்திய அணிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக தொடர்ந்தார். டெஸ்ட் அணிக்கு ரகானே ஒருநாள் அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்கள்.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே நாட்டில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான் தகுதி சுற்றில் விளையாடி வருகிறது. முக்கிய வீரர்கள் அங்கு இருப்பதால், அந்தத் தொடரை முடித்துக் கொண்டு ஜூலை 12ஆம் தேதி நடக்கும் இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்பது கடினம்.

- Advertisement -

எனவே இதை மனதில் வைத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் நட்சத்திர வீரர்களான ஜேசன் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப் போன்ற வீரர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி!

கிராஜ் பிராத்வெயிட் (கேப்டன்), ஆதனஸ், பிளாக்வுட், போனர், தேஜ்நரேன் சந்தர்பால், ரஹீம் கார்ன்வெல், ஜோசுவா டி சில்வா, ஷனான் கேப்ரியல், கவிம் ஹட்ஜ், அகிம் ஜோர்டான், மெக் ஆலிஸ்டர், மெக்கன்ஸி, மின்ட்லே, ஆண்டர்சன் பிலிப், ரேய்மான் ரெய்பர், கெமார் ரோச், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜோமல் வாரிக்கன்.