214 ரன்.. அபிஷேக் சர்மா அதிரடியில் ஹைதராபாத் வெற்றி.. 2வது இடத்துக்கு ராஜஸ்தானுக்கு நெருக்கடி

0
325
SRH

இன்று ஐபிஎல் தொடரின் 69வது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் வெளிநாட்டு வீரராக ரூசோவ் மட்டுமே விளையாடினார். மூன்று முக்கிய இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைடே 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரூசோவ் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறவிட்டார்.

கடைசிக் கட்டத்தில் கேப்டன் ஜிதேஷ் சர்மா ஆட்டம் இழக்காமல் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் தரப்பில் பந்துவீச்சில் நடராஜன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அபாயகரமான வீரர் ஹெட் அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.ஆனால் அடுத்து அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஐந்து பவுண்டரி ஆறு சிக்ஸர்களுடன் 28 பந்தில் 66 ரன்கள் குவித்தார். ராகுல் திரிபாதி 18 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சொல்லியும் கேட்காம எதுக்கு ஒளிபரப்புனிங்க ..எல்லை மீறி போறிங்க – தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ரோகித் சர்மா கண்டனம்

இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் ரெட்டி 25 பந்தில் 37 ரன்கள், ஹென்றி கிளாசன் 26 பந்தில் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஹைதராபாத் அணி 19 புள்ளி ஒன்று ஓவரில் ஆறு விக்கெட்டை மட்டும் இழந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மேலும் இன்று நடக்கும் இன்னொரு போட்டியில் கொல்கத்தா அணியை வென்றால் மட்டுமே ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் நீடிக்க முடியும். ஒருவேளை போட்டி மழையால் நடக்கவில்லை என்றால் கூட ரன் ரேட் அடிப்படையில், ஹைதராபாத் இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.