2023 உலக கோப்பை வெளியேறும் வெஸ்ட் இண்டீஸ்? 181 ரன்னில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய ஸ்காட்லாந்து!

0
2655

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே நாட்டில் வைத்து 2023 உலகக் கோப்பை காண தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன .. பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடரில் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைந்து இருக்கின்றன .

இரண்டாவது சுற்றுக்கு ஜிம்பாவே,இலங்கை,வெஸ்ட் இண்டீஸ்,ஓமன்,ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆரணிகள் தகுதி பெற்றுள்ளன . சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி ஓமன் அணியை வீழ்த்தியது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் வகிக்கிறது .

- Advertisement -

இரண்டு முறை உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அந்த அணி ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் தோல்வியடைந்து இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது .

இந்நிலையில் தனது சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தின் முதல் போட்டியில் இன்று ஸ்காட்லாந்தை எதிர்கொண்டு ஆடியது வெஸ்ட் இண்டீஸ். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மேற்கிந்திய அணியின் வீரர்கள் ஸ்காட்லாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பில்டிங்கால் ரண்களை குறிக்க முடியாமல் திணறினர் .

துவக்க வீரர் சார்லஸ் ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேற அவரைத் தொடர்ந்து ஆட வந்த சம்ராத் ப்ரூக்ஸ் தனது ரன் கணக்கை துவங்காமலேயே ஆட்டம் இழந்தார். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிவந்த சாய் ஹோப் மற்றும் நிக்லஸ் பூரன் ஆகியோரும் சொற்பரன்களில் ஆட்டம் இழக்க மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ஜேசன் ஹோல்டர் மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் ஏழாவது விக்கெட் இருக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர் . ஆனால் ஹோல்டர் 45 ரன்களிலும் ஷெப்பர்ட் 36 ரங்களிலும் ஆட்டம் இழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சில் பிரேன்டன் மேக் முல்லன் மூன்று விக்கெட்டுகளையும் கிரிஷ் ஷோல், கிரேவ்ஸ், மார்க் வாட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஏற்கனவே நெதர்லாந்து மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் அடைந்து தோல்வி மேற்கிந்திய தீவுகள் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை பின்தங்கி இருக்கிறது இந்நிலையில் இன்றைய போட்டியில் தோல்வி பெரும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உறுதியாக இந்த தொடரில் இருந்து வெளியேறுவதோடு 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் . இதன் மூலம் இரண்டு முறை சாம்பியன் ஆன மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக உலக கோப்பை போட்டியிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும்