வாழ்நாளில் எவ்ளோ பேரை பார்த்து இருக்கேன்.. ஆனா கோலியை யாரும் மிஞ்ச முடியாது.. வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் பாராட்டு.!

0
15083

சர் ஐசக் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் சர் விவ் ரிச்சர்ட்ஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான். 1970களில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த கிரிக்கெட் உலகை தனது அதிரடியான ஆட்டத்தால் மாற்றியவர் இன்று மார்டன் டே கிரேட்ஸ் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கதாநாயகன் இவர்.

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத அந்த காலத்தில் வெறும் தொப்பியுடன் களம் இறங்கி வேகப்பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களை சிக்ஸர்களுக்கும் பௌண்டரிகளுக்கும் விரட்டிய சூரன். இவர் பபுள்கம் மென்று கொண்டு ஆடுகளத்திற்குள் காலடி எடுத்து வைத்தாலே எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு பயம் தொற்றிக் கொள்ளும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை கிரிக்கெட்டை நுணுக்கமாக அலசி வருபவர்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் தற்போதைய மார்டன் டே கிரேட் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் எடுத்திருந்தார் சச்சின். தென் ஆப்பிரிக்கா அணியுடன் தனது ஒரு நாள் போட்டியின் 49 ஆவது சதத்தை நிறைவு செய்த விராட் கோலி இதன் மூலம் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்கிறார். பலரும் விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தை வியூ ரிச்சர்ட்ஸ் ஆட்டத்துடன் இணைந்து பேசுவதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி குறித்து ரிச்சர்ட்ஸ் முன்னரே பாராட்டு தெரிவித்திருந்ததும் நாம் அறிந்ததே. இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ரிச்சர்ட்சை சந்தித்து உரையாடினார் விராட் கோலி. தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணையதளத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தது தொடர்பாக அவரை வெகுவாக பாராட்டி கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார் ரிச்சர்ட்ஸ்.

அதில் குறிப்பிட்டு இருக்கும் ரிச்சர்ட்ஸ் ” நான் என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ திறமையான கிரிக்கெட் வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் யாரும் விராட் கோலியை மிஞ்ச முடியாது. நான் நீண்ட காலமாகவே விராட் கோலியின் ரசிகனாக இருந்து வருகிறேன். அவர் சச்சின் டெண்டுல்கரை போல எல்லா காலங்களுக்குமான சிறந்த வீரராக தன்னை நிரூபித்துக் கொண்டே வருகிறார்”என எழுதி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி குறித்து எழுதிய ரிச்சர்ட்ஸ் ” கடந்த சில காலங்களாகவே விராட் கோலி என்னுடன் ஒப்பிட்டு வருகின்றனர். அதற்கு அவரது ஆக்ரோஷமான ஆட்டமும் கள செயல்பாடும் காரணமாக அமைந்திருக்கிறது. அவர் ஆடுகளத்தில் எப்போதும் தீவிரமாக ஆட்டத்துடன் இணைந்து இருக்கிறார். லாங் ஆன் அல்லது லாங் ஆப் திசையில் பீல்டிங் செய்தால் கூட ஆட்டத்தோடு ஒவ்வொரு நொடியும் ஒன்று இருக்கிறார். பந்து பேட்ஸ்மேன் கால் காப்பில் பட்டு விட்டால் பந்துவீச்சாளர்களுக்கு முன்பாக இவர் முறையீடு செய்கிறார். ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் விளையாட்டோடு இணைந்து இருக்கும் விராட் கோலி போன்ற வீரர்களை நான் என்றும் பாராட்ட தவறியதில்லை” என முடித்திருக்கிறார் சர் வீவியன் ரிச்சர்ட்ஸ்.

2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகளுக்கு முன்பு வரை விராட் கோலி சரியான ஃபார்ம் இல்லாமல் ரன்கள் குவிக்க தவறினார். எனினும் ஆப்கானிஸ்தான் அணிகின்றான டி20 போட்டியில் சதம் அடித்த பிறகு தொடர்ச்சியாக தனது பழைய பார்மிற்கு திரும்பிய அவர் இந்த வருட உலகக் கோப்பையில் இரண்டு சதங்களுடன் அதிக ரன் குவித்த இந்திய வீரராக வலம் வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் மீண்டும் ஒரு சதம் எடுத்து ஒரு நாள் போட்டிகளில் 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்