ஒவ்வொரு முறையும் இந்த இங்கிலாந்து வீரர் காயப்படுத்துறார்.. பிளானே போட முடியல – ரோமன் பவல் பேட்டி

0
597
Powell

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி சூப்பர் 8 வந்தது. ஆனால் அவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக காட்டியிருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் ஜெயித்து முதலில் தங்கள் அணிந்து வீசும் என அறிவித்தார். போட்டி நடைபெற்ற செயின்ட் லூசியா மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த நாட்டில் விளையாடுவதும் மேலும் அவர்கள் பலமான பேட்டிங் வரிசையை கொண்டிருப்பதாலும் 200 ரன்களை எட்டுவது எளிது என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமாக இருந்து 180 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியைக் கட்டுப்படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 47 பந்தில் ஆட்டம் இழக்காமல் 87 ரன்கள் குவித்து போட்டியை மொத்தமாக முடித்து விட்டார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மொத்தம் 9 இன்னிங்ஸ்களில், 68 ஆவரேஜில்,187 ஸ்ட்ரைக் ரேட்டில் 478 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் இரண்டு அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடக்கம்.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் பவல் “இது எப்பொழுதும் கடினமாகவே இருக்கிறது. பில் சால்ட் எங்கள் அணிக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் எங்களை காயப்படுத்தி விடுகிறார். அவருக்கு எதிராக எங்கள் திட்டங்களை எங்களால் சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. எங்கள் விதி எங்கள் கைகளில்தான் இருக்கிறது. எனவே நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : என்ன பும்ரா மட்டும்?.. இந்திய பவுலர்கள் யாரா இருந்தாலும் அடிப்பேன்.. சாம்பியன் ஆவோம் – குர்பாஸ் சவால்

பேட்டிங் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது நாங்கள் 10 முதல் 20 ரன்கள் குறைவாக இருந்தோம். ஒரு பவுலிங் யூனிட்டாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. அதே சமயத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள். அவர்கள் தங்களுடைய திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -