ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் தங்களின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இன்று விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்குவேன் என ஆப்கானிஸ்தான் துவக்க ஆட்டக்காரர் ரகமன்னுல்லா குர்பாஸ் கூறியிருக்கிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றில் உகாண்டா நியூசிலாந்து பப்புவா நியூ கினியா அணிகளை வென்று, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று வந்திருக்கிறது. அந்த அணியின் பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது.
அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான அணியின் பேட்டிங் வரிசையை எடுத்துக் கொண்டால் துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜட்ரன் இருவரும் நல்ல தொடக்கத்தை தந்தால் மட்டுமே அவர்களுக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. அவர்களுடைய மிடில் வரிசை மிகவும் மோசமாகத்தான் விளையாடுகிறது.
இந்த நிலையில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாட இருப்பது குறித்து பேசியிருக்கும் குர்பாஸ், தான் எல்லா இந்திய பந்துவீச்சாளர்களையும் தைரியமாக விளையாடிய ரன்கள் அடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து குர்பாஸ் கூறும் பொழுது “உண்மையாக என்னுடைய டார்கெட் பும்ரா மட்டும் கிடையாது. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் குறி வைக்கப் பார்ப்பேன். பொதுவாக அவர்களுக்கு ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். ஒருவேளை மற்ற பந்துவீச்சாளர்கள் வெளியேற்றலாம். பும்ராவுக்கு எதிராக வாய்ப்பு கிடைத்தாலும், அல்லது வேறு எந்த இந்திய பந்துவீச்சாளராக இருந்தாலும் நான் வழக்கம் போல் அதிரடியாக வெளியேறி விளையாடுவேன். இதையும் படிங்க : ரோகித் நீ இந்த 2 முடிவை தப்பா எடுத்தா.. இந்தியா ஆப்கான்கிட்ட தோத்திடும் – ஸ்ரீகாந்த் நேரடியான எச்சரிக்கை
நாங்கள் இதற்கு முன்பு உலக கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் தற்பொழுது எல்லாம் வித்தியாசமாக மாறி இருக்கிறது. நாங்கள் முன்பு உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக வந்தோம். ஆனால் தற்போது நாங்கள் உலகக் கோப்பையை வெல்லும் இடத்தில் இருக்கிறோம். எங்கள் மீதான எதிர்பார்ப்புகள் மாறி இருக்கிறது. நாங்கள் தொடரை வென்று சாம்பியன் ஆக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.