ஐபிஎல் 2024

SRH vs RR.. மழைக்கான வாய்ப்பு.. போட்டி நடக்காவிட்டால்.. பைனலுக்கு போவது யார்?.. முழு தகவல்கள்

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் மழை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்திய வானிலை மையம் அறிவித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த ஹைதராபாத் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு வந்தது.

இதேபோல் அடுத்து எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு ஹைதராபாத் அணியுடன் நாளை மோதுவதற்கு தகுதி பெற்றது.

தற்பொழுது தமிழகத்தில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக நாளையும் மழைக்கான வாய்ப்பு சென்னையில் இருக்கிறது. மேலும் இறுதிப் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

நாளைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், நாளை மறுநாள் போட்டி நடைபெறும். அன்றைய நாளிலும் போட்டி நடக்காவிட்டால், லீ சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் எடுத்த ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ராஜஸ்தான் அணி பரிதாபமாக வெளியேறும்.

இதையும் படிங்க : மேக்ஸ்வெல்லுக்கு பேங்க் பேலன்ஸ் கவலையே கிடையாது.. சும்மாவே எல்லாம் கிடைக்குது – மனோஜ் திவாரி விமர்சனம்

இதே போல ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் திங்கட்கிழமை போட்டி நடத்தப்படும். அந்த நாளும் மழையால் போட்டி முழுவதுமாக நடைபெறாவிட்டால், லீக் சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் எடுத்த கொல்கத்தா அணி சாம்பியனாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by