டி20 உலகக் கோப்பை 2024

ஐசிசி செய்யும் அந்த வேலை வெறும் கண் துடைப்பு.. டி20 உலக கோப்பை மட்ட பிளேடா இருக்கு – அஸ்வின் விமர்சனம்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் போட்டித் தன்மை மிகவும் குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக போட்டிகளை பார்ப்பதற்கே மிகவும் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசிதான் இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கு பெற்றிருக்கின்றன. மேலும் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் 20 அணிகள் பங்கு பெறும் என ஐசிசி தெரிவித்திருக்கிறது.

அதே சமயத்தில் இப்படி 20 அணிகளை கொண்டு வருவது ஐசிசி செய்கின்ற வெறும் கண்துடைப்பான வேலை மட்டும் தான் என்றும், மேலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் போட்டித் தன்மையில்லை என்றும், இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு சலிப்பாக இருப்பதாகவும் அஸ்வின் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “இந்தியா பங்களாதேஷ் அணிகள் விளையாடிய போட்டியை உண்மையில் பார்க்க முடியவில்லை. பதினெட்டாவது ஓவரில் மெகதி ஹசன் நாட்-அவுட் ஆக இருக்க வேண்டும் என பந்தைத் தட்டி சிங்கிள் எடுக்கிறார். ஆனால் ஒரு போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை. ரியாத் உசைன் வந்து கொஞ்சம் ஆக்ரோஷத்தை காட்டினார். மற்றபடி இந்த போட்டியை போட்டித் தன்மையில்லாததால் பார்க்க சலிப்பாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கு பலம் வாய்ந்த பத்து அணிகளை கொண்டு நடத்துவது நல்லது. மேலும் அமெரிக்கா மாதிரியான ஒரு புதிய நாட்டில் நடத்தும் பொழுது, அங்கு வந்து அணிகள் அந்த சூழ்நிலைக்கு தங்களை மாற்றிக் கொள்வதற்கு நேரம் எடுக்கும். இதற்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் மொத்தமாக நடத்தி இருக்கலாம். அதற்கேற்றபடி ஐசிசி நேரம் கொடுத்திருக்கலாம்.

இதையும் படிங்க : இந்தியாகிட்ட யாரும் பேச முடியாது.. அவங்கதான் உலக கிரிக்கெட்டை நடத்தறாங்க.. மோதாதிங்க – கிறிஸ் கெயில் பேட்டி

மேலும் சிறிய அணிகளை டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்க இப்படி ஐசிசி செய்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட, தற்போது டி20 உலகக் கோப்பை சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் அமெரிக்க அணிக்கு, அடுத்து 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வரையில் பெரிய நாடுகளுடன் ஒரு போட்டி கூட இல்லை. ஐசிசி அந்த நாடுகளுக்கு நல்லது செய்ய நினைத்தால் பெரிய நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட வைக்க வேண்டும். ஆனால் ஐசிசி செய்து கொண்டிருப்பது வெறும் கண் துடைப்பு வேலை” என்று குற்றம் சாட்டி பேசி இருக்கிறார்.

Published by