டி20 உலகக் கோப்பை 2024

நாங்க அதில்லாம பட்டினியா இருந்தோம்.. திரும்ப அந்த அவுட்டுக்கு ரோகித்த விமர்சனம் செய்யாதிங்க – கவாஸ்கர் பேட்டி

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகப்பெரிய மகிழ்ச்சியில் தள்ளி இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்த விதம், அவர் ஆரம்ப காலத்தில் அதிரடியாக விளையாடியது போலவே இருந்தது. தற்போது ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டிகளை கூட தோற்காமல் அரையிறுதி சுற்றுக்கு வந்திருக்கிறது. மேலும் அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கயானா மைதானத்தில் நாளை மறுநாள் விளையாட இருக்கிறது.

இந்த முக்கிய போட்டிக்கு முன்பாக இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய துவக்க ஆட்டக்காளர்களிடமிருந்து வந்த முதல் சிறந்த இன்னிங்ஸ் இதுவாக இருக்கிறது.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “ரோஹித் சர்மா விளையாடியது என்ன மாதிரியான ஒரு இன்னிங்ஸ். அவர் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஸ்லாக் ஸ்வீப் ஏறக்குறைய நூறு மீட்டர் தூரம் சென்றது. அடுத்து ஸ்டார்க் பந்துவீச்சில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அவர் அடித்த இன்னொரு சிக்சர் நம்ப முடியாது.அவர் பேட்ஸ்மேன்களில் சிறந்த டைமிங் வைத்திருப்பவர்.

- Advertisement -

உண்மையில் ரோஹித் சர்மாவின் இப்படிப்பட்ட ஒரு பேட்டிங் பார்ப்பதற்காக நாங்கள் எல்லாம் பட்டினி கிடந்தோம். இந்திய அணிக்கு இவர்கள் நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினோம். நேற்று ரோஹித் சர்மா கிட்டத்தட்ட சாதம் அடித்தார். அவர் முழுக்க முழுக்க அணியின் நலம் பற்றி யோசிப்பவர். அவர் தனிப்பட்ட சாதனைகளை பார்ப்பது கிடையாது.இதன் காரணமாகவே ரோஹித் சர்மா வெற்றி பெறும் பொழுது எல்லோரும் அதை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.

இதையும் படிங்க : ஹர்திக் கிடையாது.. ரோகித்துக்கு பிறகு கேப்டன் அந்த பையன்தான்.. இதுல தப்பும் இல்ல – சேவாக் கருத்து

அதே சமயத்தில் அவர் நினைத்தபடியே மீண்டும் ஒருமுறை இடது கை பந்துவீச்சாளர் ஸ்டார்க் இடம் ஆட்டம் இழந்து இருக்கிறார். தற்பொழுது இதற்காக நாம் ரோகித் சர்மாவை மீண்டும் விமர்சனம் செய்யப் போகிறோமா?” என்ற கேள்வி எழுப்பி பேசி பாராட்டி இருக்கிறார்.

Published by